search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆபரேசன் தாமரை திட்டத்தின் மூலம் மற்ற கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பெற வேண்டாம் -  அமித் ஷா
    X

    ஆபரேசன் தாமரை திட்டத்தின் மூலம் மற்ற கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பெற வேண்டாம் - அமித் ஷா

    ஆபரேசன் தாமரை திட்டத்தின் மூலம் மற்ற கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பெற வேண்டாம் என்று கர்நாடக மாநில பா.ஜ.க. மூத்த தலைவர்களுக்கு அமித் ஷா கூறியுள்ளார். #AmitShah #bjp

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் கூட்டணி ஆட்சி தானாக கவிழ்ந்தால் உடனடியாக பா.ஜனதா ஆட்சியை அமைக்க நடவடிக்கை எடுக்கும்படியும், இந்த வி‌ஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் கர்நாடக தலைவர்களுக்கு அமித் ஷா உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கர்நாடக பா.ஜ.க மூத்த தலைவர்களிடம், கூட்டணி ஆட்சி தானாக கவிழ்ந்தால் பா.ஜனதா தாமதம் செய்யாமல் ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுக்கும்படியும், இந்த வி‌ஷயத்தில் பா.ஜனதாவுக்கு மக்களிடையே கெட்ட பெயர் ஏற்படாதவாறு மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படும் படியும், குறிப்பாக காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் தலைவர்களிடையே உண்டான கருத்து வேறுபாடுகளால் தான் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததாக இருக்க வேண்டும், ஆப்ரேசன் தாமரை திட்டத்தின் மூலம் மற்ற கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பெற வேண்டாம் என்றும், பாரதிய ஜனதாவிற்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏ.க்கள் தானாக முன்வந்து ஆதரவு தருவதாக இருக்கவேண்டும். இதனை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.


    ஏனெனில் பா.ஜனதாவுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஆட்சி அமைக்க இன்னும் 8 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டும் தேவை என்பதால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால் பா.ஜனதா ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி அமித்ஷா உத்தரவிட்டு இருப்பதாக தெரிகிறது. அமித்ஷாவிடம் இருந்து வந்த உத்தரவால் கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் உற்சாகம் அடைந்திருப்பதாகவும், ஆட்சியை பிடிக்க அவர்கள் தீவிரம் காட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அதே நேரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பா.ஜனதா எம்.எல்.ஏ.க் களின் கூட்டத்தை எடியூரப்பா திடீரென்று கூட்டி இருப்பதாகவும், அதில் முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. #AmitShah #bjp

    Next Story
    ×