என் மலர்

  செய்திகள்

  குறைதீர்க்கும் அதிகாரி நியமிக்காதது ஏன்? வாட்ஸ்-அப் நிறுவனத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
  X

  குறைதீர்க்கும் அதிகாரி நியமிக்காதது ஏன்? வாட்ஸ்-அப் நிறுவனத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குறை தீர்க்கும் அதிகாரியை நியமிக்காதது ஏன்? என வாட்ஸ்-அப் நிறுவனத்துக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள் 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர். #SupremeCourt #WhatsApp
  புதுடெல்லி:

  சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ்-அப் நிறுவனம், குறை தீர்க்கும் அதிகாரியை நியமிக்கவில்லை எனவும், இந்திய சட்டங்களுக்கு இணங்கவில்லை எனவும் குற்றம் சாட்டி பொறுப்புடைமை மையம் என்ற அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.  இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகளுக்கு இணங்கும் வரை, வாட்ஸ்-அப் நிறுவனம் கட்டணம் வசூலிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமண், இந்து மல்கோத்ரா ஆகியோரை கொண்ட அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது குறை தீர்க்கும் அதிகாரியை நியமிக்காதது ஏன்? என வாட்ஸ்-அப் நிறுவனத்துக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு அந்த நிறுவனத்துக்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.  #SupremeCourt #WhatsApp
  Next Story
  ×