search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராளிக்கு துப்பாக்கிகள் வழங்கிய மணிப்பூர் காங்கிரஸ் எம்எல்ஏ கைது
    X

    போராளிக்கு துப்பாக்கிகள் வழங்கிய மணிப்பூர் காங்கிரஸ் எம்எல்ஏ கைது

    மணிப்பூர் போராளிகலுக்கு துப்பாக்கிகளை வழங்கியதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. யமாதங் ஹாக்கிப் கைது செய்யப்பட்டார். #YamthongHaokip
    இம்பால்:

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2016 மற்றும் 2017-ல் 2-வது பட்டாலியன் ஆயுத கிடங்கில் இருந்து 56 துப்பாக்கிகள் மற்றும் 58 தோட்டாக்கள் மாயமாகி இருந்தது.

    இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) விசாரணை நடத்தி வருகிறது.

    கடந்த மாதம் மணிப்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. யமாதாங் ஹாக்கிப் ஹிப் வீட்டில் இருந்து துப்பாக்கி ஒன்றை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இந்த துப்பாக்கி ஆயுத கிடங்கில் இருந்து காணாமல் போனதாகும். மேலும் தங்க கட்டிகள் மற்றும் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது.

    விசாரணையில் மணிப்பூரை சேர்ந்த போராளி அமைப்புகளுடன் எம்.எல்.ஏ. ஹாக்கிக்கு தொடர்பு இருந்ததும், சட்ட விரோத ஆயுத தொழிலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதன் அடிப்படையில் ‘கிரா’ என்ற போராளி அமைப்பின் தலைவர் டேவிட் ஹன்சிங் பண்ணை வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கிருந்து 9 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆயுத கிடங்கில் இருந்து மாயமானவை ஆகும். இந்த துப்பாக்கிகளை அவருக்கு எம்.எல்.ஏ. கொடுத்தது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து மணிப்பூர் போராளிகலுக்கு துப்பாக்கிகளை வழங்கியதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.யமாதங் ஹாக்கிப் கைது செய்யப்பட்டார். அவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

    இதேபோல ‘கிரா’ என்ற போராளி குழு தலைவர் டேவிட் ஹன்ஹிங்கும் கைதானார். காணாமல் போன துப்பாக்கிகளில் இது வரை 14 துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. #YamthongHaokip
    Next Story
    ×