search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளாட்சி தேர்தல் குறித்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி - மம்தா பானர்ஜி
    X

    உள்ளாட்சி தேர்தல் குறித்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி - மம்தா பானர்ஜி

    மேற்கு வங்காளத்தின் உள்ளாட்சி தேர்தல் குறித்து சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். #WestBengal #PanchyatPoll #TrinamoolCongress #MamataBanerjee
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திரிணாமுல் காங். கட்சியினரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக, கம்யூனிஸ்டு கட்சியினரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து, எதிர் வேட்பாளர் இல்லாத 20 ஆயிரம் இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக பாஜக, கம்யூனிஸ்டு கட்சியினர் தொடர்ந்த வழக்கில், திரிணாமுல் காங். கட்சியினர் பெற்ற வெற்றி செல்லாது என ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து பாஜக, கம்யூனிஸ்டு கட்சியினர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், உள்ளாட்சி தேர்தலில் 20 ஆயிரம் இடங்களில் திரிணாமுல் காங்கிரசார் பெற்ற வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுவை இன்று தள்ளுபடி செய்தது.

    இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் உள்ளாட்சி தேர்தல் குறித்து சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு ஜனநாயகத்துக்கு கிடைத்துள்ள வெற்றியாகும். இந்த வெற்றியை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். இதன்மூலம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயன்ற கம்யூனிஸ்டுகள், பாஜகவினர் முயற்சி தோல்வி அடைந்துள்ளது என தெரிவித்துள்ளார். #WestBengal #PanchyatPoll #TrinamoolCongress #MamataBanerjee
    Next Story
    ×