என் மலர்

  செய்திகள்

  லோக் ஆயுக்தா அமைப்பதை விரைவுப்படுத்த வேண்டும்- மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
  X

  லோக் ஆயுக்தா அமைப்பதை விரைவுப்படுத்த வேண்டும்- மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  லோக் ஆயுக்தா, லோக்பால் அமைக்கும் பணியை விரைவுப்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். #SC #Lokayukta
  புதுடெல்லி:

  அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை விசாரிக்க வகை செய்யும் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் இயற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதை தொடர்ந்து தமிழக சட்டசபையில் சமீபத்தில் லோக் ஆயுக்தா சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

  இந்த நிலையில் லோக் ஆயுக்தா மற்றும் லோக்பால் குறித்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, லோக் ஆயுக்தா, லோக்பால் அமைக்கும் பணியை விரைவுப்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

  அதற்கு பதில் அளித்த மத்திய அரசு வக்கீல், “நாளை மறுநாள் (19-ந் தேதி) தேர்வுக்குழு கூட உள்ளதாக தெரிவித்தார்.

  அதை தொடர்ந்து கூட்டத்தில் எடுக்கும் முடிவுகள் குறித்தும் இதுவரை எடுத்த நடவடிக்கைகள் பற்றியும் வருகிற 23-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்” என்றும் உத்தரவிட்டனர். மேலும் வழக்கை 24-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர். #SC #Lokayukta
  Next Story
  ×