என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பூட்டானில் இருந்து கொண்டுவந்த ரூ.3 கோடி கடத்தல் தங்கம் பிடிபட்டது
Byமாலை மலர்8 July 2018 11:13 AM GMT (Updated: 8 July 2018 11:13 AM GMT)
பூட்டானில் இருந்து கடத்திவந்த ரூ.3.18 கோடி மதிப்பிலான 10 கிலோ தங்கத்தை மேற்கு வங்காளம் மாநிலத்தில் வருவாய்துறை புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #10kgsgold #goldsmuggled
புதுடெல்லி:
சர்வதேச அளவில் நாளுக்குநாள் தங்கத்தின் விலை ஏறிகொண்டே வரும் நிலையில், இந்தியாவில் தங்கத்தின் தேவை அதிகரித்துகொண்டு வருகிறது. இதனால், வெளிநாடுகளில் இருந்து பல்வேறு வழிகளில் தங்கம் கடத்திவரும் நபர்களின் எண்ணிக்கையும் பெருகி கொண்டே வருகிறது.
இந்நிலையில், பூட்டானில் இருந்து ஜைகான் - புனேட்ஷோல்லிங் எல்லை வழியாக பீகார் மாநிலத்துக்கு தங்கம் கடத்தப்படுவதாக மத்திய அரசின் வருவாய்துறை புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையொட்டி, மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள சிலிகுரி மாவட்டத்தில் வருவாய்துறை புலனாய்வு அதிகாரிகள் தீவிரமான வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ஃபுல்பாரி என்னும் இடத்தில் வேகமாக வந்த காரை வழிமறித்து சோதனையிட்ட அதிகாரிகள் அந்த காரினுள் இருந்த தலா ஒரு கிலோ எடையுள்ள 10 தங்க கட்டிகளை பறிமுதல் செய்ததுடன், கடத்தல்காரர்கள் இருவரை கைது செய்துள்ளனர். #10kgsgold #goldsmuggled
Next Story
×