என் மலர்

  செய்திகள்

  அமர்நாத் யாத்திரையில் எல்லை பாதுகாப்பு படை அதிகாரி மரணம்- 3 யாத்ரீகர்கள் மருத்துவமனையில் அனுமதி
  X

  அமர்நாத் யாத்திரையில் எல்லை பாதுகாப்பு படை அதிகாரி மரணம்- 3 யாத்ரீகர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமர்நாத் யாத்திரை பாதையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி நெஞ்சுவலி காரணமாக மரணம் அடைந்தார். #AmarnathYatra #AmarnathPilgrims #BSFOfficerDies
  ஸ்ரீநகர்:

  காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக் கோவிலில் இயற்கையாக உருவாகி உள்ள பனிலிங்கத்தை தரிசனம் செய்வதற்கான யாத்திரை தொடங்கி உள்ளது. கடும் மழை, பனியையும் பொருட்படுத்தாமல் கரடுமுரடான பாதைகளில் பக்தர்கள் பயணித்து பனி லிங்கத்தை தரிசனம் செய்தவண்ணம் உள்ளனர். 28-ம் தேதி யாத்திரை தொடங்கியது. முதல் இரண்டு நாட்களில் 2600 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.  பக்தர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக அரசு சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் ஆங்காங்கே ராணுவ வீரர்கள் முகாம் அமைத்துள்ளனர். மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

  இந்நிலையில், பாரம்பரிய பாகல்காம் பாதையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்பு படை உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஹர்தியால் சிங்கிற்கு 28-ம் தேதி இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நிலை மோசமடைந்ததால், ஸ்ரீநகரில் உள்ள எஸ்.கே.ஐ.எம்.எஸ். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டார்.

  இதேபோல் பல்வேறு பகுதிகளில் யாத்திரை சென்ற 3 பக்தர்கள் மூச்சுத்திணறல் காரணமாக எஸ்.கே.ஐ.எம்.எஸ். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள், பஞ்சாப் மாநிலம் துர்காபானியைச் சேர்ந்த அனில் குமார் ஜஸ்ரா (50), மகாராஷ்டிராவைச் சேர்ந்த ராஜா ராம் (54) மற்றும் டெல்லியைச் சேர்ந்த சஞ்சு கபூர் (43) என்பது தெரியவந்துள்ளது. #AmarnathYatra #AmarnathPilgrims #BSFOfficerDies

  Next Story
  ×