என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சன்னியாசினிகளையும் விட்டு வைக்காத காமுகர்கள் - சத்தீஸ்கரில் கொடூரம்
Byமாலை மலர்17 Jun 2018 8:43 AM GMT (Updated: 17 Jun 2018 8:43 AM GMT)
சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 சன்னியாசினிகளை கூட்டாக கற்பழித்த 4 பேர் மீது அம்மாநில போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராய்பூர் :
சத்தீஸ்கர் மாநிலம், ஜாங்ஜிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையதிற்கு இரண்டு சன்னியாசினிகள் கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி வந்தடைந்தனர். அவர்களை அம்மாவட்டத்தில் உள்ள ஆசிரம் ஒன்றிற்கு காரில் அழைத்து செல்ல அவர்களுக்கு அறிமுகமான திலிப்சந்த் படேல் என்பவர் ரயில் நிலையம் வந்திருந்தார்.
ஆனால், ஆசிரமம் செல்வதற்கு பதிலாக குழந்தை ஒன்றின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வருகை தர வேண்டும் என்று சன்னியாசினிகளை எமாற்றி கோர்பா மாவட்டம் செல்லும் வழியில் காரை ஓட்டி சென்றுள்ளார் படேல். அங்கு துப்பாக்கி முனையில் படேல் உள்பட மேலும் மூவர் சேர்ந்து சன்னியாசினிகளை கூட்டாக கற்பழித்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து, சத்தீஸ்கர் மாநிலத்தை விட்டே சென்று விட வேண்டும் என சன்னியாசினிகளுக்கு அவர்கள் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சன்னியாசினிகளில் ஒருவர் அம்மாநில முதல்வர் ரமன் சிங்கிற்கு புகார் மனு ஒன்றை எழுதியிருந்தார்.
புகார் மனு தொடர்பாக மாநில அரசின் அறிவுறுத்தலின்படி குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் மீதும் நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில போலீசார் இன்று தெரிவித்துள்ளனர்.

Next Story
×