search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    காதலனுடன் சண்டை- பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பி தற்கொலை செய்த இளம்பெண்
    X

    காதலனுடன் சண்டை- பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பி தற்கொலை செய்த இளம்பெண்

    மேற்கு வங்காள மாநிலத்தில் 18 வயது இளம்பெண் ஒருவர் காதலனுடன் சண்டை போட்டு பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் 24 பாரகான் மாவட்டம் சோனார்புர் என்ற இடத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்தார்.

    அன்று வாலிபருடன் நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அதன் பிறகு வீடு திரும்பிய அந்த பெண் யாரிடமும் பேசாமல் மவுனமாக இருந்து வந்தார்.

    இவரது தாயார் ஆஸ்பத்திரி ஒன்றில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். தந்தை நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். அவர்கள் இருவருமே வெளியே சென்றிருந்தனர்.

    அப்போது அந்த இளம்பெண் திடீரென தனது அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அவர் தூங்கி விட்டார் என கருதி யாரும் அவரை பார்க்கவில்லை.

    காலையில் வெகு நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்து அவரது தாயார் அந்த அறைக்கு சென்று பார்த்தார்.

    மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்திருப்பது அப்போதுதான் தெரிய வந்தது. அவர் தூக்கில் தொங்கும் காட்சிகளை போக்கஸ் செய்து அவரது செல்போன் வைக்கப்பட்டு இருந்தது.

    அதை ஆய்வு செய்த போது, அந்த பெண் தற்கொலையை பேஸ்புக்கில் ‘லைவ்’வாக நேரடி ஒளிபரப்பு செய்திருந்தது தெரியவந்தது. தற்கொலை செய்வதை காதலன் பார்க்கும் வகையில் அவர் ஏற்பாடு செய்திருந்ததாக தெரிகிறது.

    இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலனிடம் விசாரணை நடக்கிறது. #Tamilnews
    Next Story
    ×