என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீரில் 2 எல்லை பாதுகாப்பு படைப்பிரிவு சேர்க்கப்படும் - ராஜ்நாத் சிங் தகவல்
Byமாலை மலர்8 Jun 2018 9:57 PM GMT (Updated: 8 Jun 2018 9:57 PM GMT)
ஜம்மு பிராந்திய பாதுகாப்புக்காக 2 எல்லை பாதுகாப்பு படைப்பிரிவு புதிதாக சேர்க்கப்படும் என்று உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு:
காஷ்மீரில் 2 நாள் பயணம் மேற்கொண்ட உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், அங்கிருந்து கிளம்பும் முன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘ஜம்மு பிராந்திய பாதுகாப்புக்காக 2 எல்லை பாதுகாப்பு படைப்பிரிவு புதிதாக சேர்க்கப்படும். அத்துடன் 5000 உள்ளூர் இளைஞர்களைக்கொண்டு 5 இந்திய ரிசர்வ் படைப்பிரிவு உருவாக்கப்படும். இதில் எல்லையோரத்தில் வசிக்கும் இளைஞர்களுக்கு 60 சதவீதம் இடமளிக்கப்படும்’ என்றார்.
ஜம்மு மற்றும் காஷ்மீர் பிராந்தியங்களுக்கு என தலா ஒரு பெண்கள் படைப்பிரிவு உருவாக்கப்படும் எனக்கூறிய ராஜ்நாத் சிங், இதற்காக மாநிலத்தில் இருந்து 2 ஆயிரம் பெண்கள் நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ‘பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தாக்குதலில் உயிரிழப்போரின் குடும்பத்துக்கு வழங்கப்படும் ரூ.5 லட்சம் இழப்பீட்டு தொகை இனிமேல் அவரது உறவினரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இதில் வைப்புத்தொகை தொடர்பான அனைத்து நிபந்தனைகளும் நீக்கப்பட்டு உள்ளன.
காஷ்மீரில் வசிக்கும் மேற்கு பாகிஸ்தான் அகதிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.5½ லட்சம் நிதியுதவி வழங்கப்படும். இதன் மூலம் சுமார் 5764 குடும்பங்கள் பயனடைவார்கள்’ என்று குறிப்பிட்டார்.

Next Story
×