search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓட்டல்களில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 நாட்கள் தங்குவதற்காக ரூ.5 கோடி செலவு
    X

    ஓட்டல்களில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 நாட்கள் தங்குவதற்காக ரூ.5 கோடி செலவு

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 நாட்கள் ரெசார்ட்டு மற்றும் ஓட்டல்களில் தங்குவதற்காக ரூ.5 கோடி செலவாகி இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். பின்னர் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற எடியூரப்பாவால் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் போனதால், பதவியை ராஜினாமா செய்தார். தற்போது காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியுள்ளன. முன்னதாக காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை தங்களது பக்கம் இழுக்க பா.ஜனதா முயற்சித்தது.

    இதனால் அந்த கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் ரெசார்ட்டு மற்றும் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் முதலில் ராமநகர் மாவட்டம் பிடதியில் உள்ள ஒரு ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஐதராபாத் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. அது முடிந்த பின்பே ஓட்டலில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் சொந்த தொகுதிக்கு செல்ல உள்ளனர்.



    இந்த நிலையில், ஓட்டல் அல்லது ரெசார்ட்டில் ஒரு எம்.எல்.ஏ. தங்குவதற்காக ஒரு நாளுக்கு மட்டும் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அதாவது ஒரு எம்.எல்.ஏ.வின் காலை டிபனுக்கு ரூ.1,300-ம், மதியம் சாப்பாட்டுக்காக ரூ.1,600-ம், இரவு உணவுக்காக ரூ.1,800-ம் செலவு செய்யப்படுவதாக தெரிகிறது. மேலும் ஓட்டல் அல்லது ரெசார்ட்டில் ஒரு படுக்கையை கொண்ட அறைக்கு ஒரு நாள் வாடகையாக ரூ.7 ஆயிரமும், 2 படுக்கைகள் கொண்ட அறைக்கு ரூ.14 ஆயிரம் வாடகை கொடுப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

    அதே நேரத்தில் ஓட்டலில் பெரிய அரங்கில் எம்.எல்.ஏ.க்களுடன் கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்தியது, எம்.எல்.ஏ.க்களின் குடும்பத்தினர் வந்து தங்கியதுடன், அவர்கள் சாப்பாட்டுக்கான ஆன செலவு என ஒட்டு மொத்தமாக நேற்று முன்தினம் வரை 8 நாட்களில் ரூ.5 கோடியை காங்கிரஸ் கட்சியினர் செலவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அந்த பணத்தை யார்? வழங்கினார்கள் என்பது தெரியவில்லை. எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் பொறுப்பு டி.கே.சிவக்குமார், அவரது சகோதரர் டி.கே.சுரேசுக்கு வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். 
    Next Story
    ×