search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக தேர்தலில் பா.ஜனதா ரூ.6,500 கோடி செலவு செய்தது- காங்கிரஸ் குற்றச்சாட்டு
    X

    கர்நாடக தேர்தலில் பா.ஜனதா ரூ.6,500 கோடி செலவு செய்தது- காங்கிரஸ் குற்றச்சாட்டு

    கர்நாடக தேர்தலில் ரூ.6,500 கோடியை பா.ஜனதா செலவிட்டு உள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. #KarnatakaElection #BJP #congress
    புதுடெல்லி:

    கர்நாடக சட்டசபை தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உலகிலேயே மிகப்பெரும் பணக்கார அரசியல் கட்சியாக பா.ஜனதா உள்ளது. கர்நாடக தேர்தலில் ரூ.6,500 கோடியை பா.ஜனதா செலவிட்டு உள்ளது. இந்தப் பணம் எங்கு இருந்து வந்தது என்பது குறித்து பா.ஜனதா விளக்கம் அளிக்க வேண்டும்.

    எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற பண பலத்தையும், அரசு எந்திரத்தையும் பா.ஜனதா தவறாக பயன்படுத்தியது. இது குறித்து சுதந்திரமான விசரணை நடத்தப்பட வேண்டும்.

    கர்நாடகத்தில் ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக நடந்து கொண்டதற்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். கர்நாடக தேர்தல் முடிவு பா.ஜனதாவுக்கு சாதகமாக இல்லை. ஆனால் அந்த கட்சிக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதை சுயநலத்துடன் பா.ஜனதாவும் ஏற்றுக்கொண்டது.



    ஆனந்த் சர்மா

    கர்நாடக தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி அரசியல் கண்ணியத்தை தரம் தாழ்த்திவிட்டார். பிரசாரத்தின் போது அவர் பேசிய வார்த்தைகளின் மூலம் தன்னையும் பிரதமர் பதவியையும் தரம் தாழ்த்திவிட்டார். இதற்கு முன்பு பிரதமர்களாக இருந்த யாரும் மோடி போல் மோசமாக பேசியது இல்லை. தேர்தல் பிரசாரத்தில் பாதி பொய்-பாதி உண்மைகளை கூட மோடி தெரிவிக்க வில்லை. அவர் பேசிய அனைத்தும் பொய்களே. இதனால் தான் பா.ஜனதா தோற்றது.

    ஆனால் அதே நேரத்தில் கடந்த தேர்தலைக் காட்டிலும் இந்த தேர்தலில் காங்கிரசுக்கு 2 சதவீதம் வாக்குகள் அதிகமாக கிடைத்துள்ளன. தேர்தலின் போது மக்களிடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது.

    மத்தியில் பா.ஜனதா கூட்டணி அரசு அமைத்து 4 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடுவதற்கு பதிலாக நாட்டு மக்களுக்கு மோடி பிராயச்சித்தம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.#KarnatakaElection2018 #BJP #congress
    Next Story
    ×