search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகாவைத் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் பிரதமர் மோடி
    X

    கர்நாடகாவைத் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் பிரதமர் மோடி

    கர்நாடகாவைத் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலுக்கு பிரதமர் மோடி அடுத்த மாதமே பா.ஜ.க. சார்பில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். #Parliamentelection #PMModi

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 5 ஆண்டு பதவி காலம் நிறைவு பெறுவதற்கு சரியாக ஓராண்டு உள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை பிடித்தது. அடுத்த தேர்தலுக்கு ஓராண்டு இருந்தாலும் ஏப்ரல் மாதமே ஓட்டுப்பதிவு நடைபெறும் என்பதால் இப்போதே அனைத்துக்கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.

    மத்தியில் பா.ஜ.க. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவும் உறுதியாக உள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் அவர்கள் இருவரும் சேர்ந்து வகுத்த அதிரடி திட்டங்கள் பா.ஜ.க. வெற்றிக்கு மிகவும் கை கொடுத்தன.

    அதுபோல 2019-ம் ஆண்டு தேர்தலிலும் புதிய வியூகங்களை அவர்கள் இருவரும் வகுக்க உள்ளனர். அவர்களது திட்டத்தின்படி அடுத்த மாதமே (ஜூன்) தேர்தல் பிரசாரத்தை தொடங்க முடிவு செய்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி பா.ஜ.க. சார்பில் முதல் பிரசார கூட்டத்தை நடத்த உள்ளார்.


    பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் மத்தியில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு செல்ல உள்ளார். அவருடன் அமித்ஷாவும் செல்கிறார். அங்கு நடக்கும் பிரமாண்ட கூட்டத்தில் மோடியும், அமித்ஷாவும் பேசுகிறார்கள்.

    இது 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான முதல் தேர்தல் பிரசார கூட்டமாக கருதப்படுகிறது. அந்த கூட்டத்தில் பேசி முடித்த பிறகு மோடியும், அமித்ஷாவும் பீகார் மாநிலத்திற்கு சென்று பேச உள்ளனர்.

    இந்த பிரசார கூட்டங்களுக்கு இடையே புதிய நலத்திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க திட்டமிட்டுள்ளார். குறிப்பாக புர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் வழிதடத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

    இதற்கிடையே வருகிற 28-ந்தேதி நடைபெற உள்ள கைரானா, நூர்பூர் தொகுதிகளின் இடைத்தேர்தல் பிரசாரத்திலும் அவர் பங்கேற்க உள்ளார். கர்நாடகாவை தொடர்ந்து பிரதமர் மோடி உத்தரபிரதேசத்தில் பிரசாரம் தொடங்குவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    வாராணாசி தொகுதியில் இருந்து எம்.பி.யாக இருக்கும் பிரதமர் மோடி அடுத்த ஆண்டு தேர்தலிலும் அந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிய வந்துள்ளது. இதனால் தனது தேர்தல் பிரசாரத்தை அந்த தொகுதியில் இருந்து அவர் தொடங்குவதாக கூறப்படுகிறது. #Parliamentelection #PMModi

    Next Story
    ×