search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.டி.வி.தினகரன் தாக்கல் செய்த இரட்டை இலை சின்னம் வழக்கு 15-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
    X

    டி.டி.வி.தினகரன் தாக்கல் செய்த இரட்டை இலை சின்னம் வழக்கு 15-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

    இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணையை 15-ந் தேதிக்கு டெல்லி ஐகோர்ட்டு ஒத்திவைத்தது. #TTVDinakaran
    புதுடெல்லி:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி, சங்கீதா திங்ரா சேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டி.டி.வி.தினகரன் சார்பில் வக்கீல் மீனாட்சி அரோரா ஆஜராகி வாதாடினார்.



    அவர் தன்னுடைய வாதத்தில், ‘இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கு தலைமை தேர்தல் கமிஷனில் விசாரணைக்கு வந்தபோது ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தாக்கல் செய்த, கட்சி பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களின் பிரமாண பத்திரங்களில் பெரும்பாலானவை போலியானவை என்றும், அவற்றில் போலி கையெழுத்து இடப்பட்டுள்ளதாகவும் நாங்கள் புகார் தெரிவித்தோம். மேலும் அந்த பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம். ஆனால் தேர்தல் கமிஷன் எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை’ என்று கூறினார்.

    இந்த பிரமாண பத்திரங்கள் குறித்து போதிய ஆதாரங்களுடன் புகார் அளித்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறிய மீனாட்சி அரோரா, தவறான தகவல்களை தெரிந்தே தாக்கல் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று வாதிட்டார்.

    பின்னர் இந்த வழக்கின் விசாரணையை 15-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
    Next Story
    ×