என் மலர்

  செய்திகள்

  ஜார்க்கண்டில் சிறுமி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் - 16 பேர் கைது
  X

  ஜார்க்கண்டில் சிறுமி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் - 16 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிறுமியை பலாத்காரம் செய்து எரித்து கொன்ற கும்பலைச் சேர்ந்த 16 பேரை போலீசார் கைது செய்தனர். #Jharkhandrape
  ராஞ்சி:

  ஜார்க்கண்ட் மாநிலம் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தார் பஞ்சாயத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து பஞ்சாயத்தில் பலாத்காரம் செய்த 4 நபர்களுக்கு தலா 100 தோப்புக்கரணம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

  இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் 20 பேர் கொண்ட கும்பலுடன் கடந்த வியாழக்கிழமை இரவு சிறுமியின் வீட்டிற்குள் புகுந்து அவளை உயிருடன் எரித்துக்கொன்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  இதுகுறித்து போலீசார் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அந்த கும்பலைச் சேர்ந்த 16 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.  #Jharkhandrape

  Next Story
  ×