என் மலர்

செய்திகள்

மூன்று வயது சிறுமி பாலியல் பலாத்காரம்- வீட்டு உரிமையாளர் கைது
X

மூன்று வயது சிறுமி பாலியல் பலாத்காரம்- வீட்டு உரிமையாளர் கைது

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தில் மூன்று வயது சிறுமியை பாலியல் பாலத்காரம் செய்த வீட்டு உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சண்டிகர்:

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தில் பக்‌ஷிவாலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூன்று வயது சிறுமி வீட்டு உரிமையாளரால் பாலியல் பாலத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டதைக் கண்ட அவரது தாய் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சிறுமியை வீட்டு உரிமையாளர் அழைத்து சென்றதை பார்த்ததாக சிறுமியின் அண்ணன் அவரது தாயிடம் கூறியுள்ளார். இதையடுத்து வீட்டின் உரிமையாளர் சுரிந்தர் குமார் மீது சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார்  சுரிந்தர் குமாரை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Next Story