search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திரா சிறுமி கற்பழிப்பு வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி தற்கொலை
    X

    ஆந்திரா சிறுமி கற்பழிப்பு வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி தற்கொலை

    ஆந்திரப்பிரதேசம் மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் சிறுமி கற்பழிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.#andhrarape
    ஐதராபாத்:

    ஆந்திரப்பிரதேசம் மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை பக்கத்து வீட்டைச் சேர்ந்த ரிக்சா டிரைவர் சுப்பையா நேற்று கற்பழித்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் 10 போலீசார் கொண்ட சிறப்பு படையினர் குற்றவாளியை தேடி வந்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்  என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். எம்.எல்.ஏ. யேரபதினி ஸ்ரீவசா ராவ் 2.5 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியை யு.எஸ்.ஆர்.சி.பி. எம்எல்ஏ ரோஜா மற்றும் மாநில துணை முதல் மந்திரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியை நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

    இதற்கிடையில், தலைமறைவாக உள்ள சுப்பையா தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என உறவினர் ஒருவருக்கு போன் மூலம் தகவல் அளித்துள்ளார். இதையடுத்து அவர் கிருஷ்ணா ஆற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் ஆற்றில் தேடி வந்தனர். அப்போது அடையாளம் தெரியாத உடல் ஒன்று ஆற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.

    அது குற்றவாளி உடையதாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சுப்பையா அப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. #andhrarape



    Next Story
    ×