என் மலர்

  செய்திகள்

  கரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர் - வீடியோ
  X

  கரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர் - வீடியோ

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒடிசா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கரடியுடன் செல்பி எடுக்க முயன்றபோது அந்த கரடியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். #Odisha #SelfiewithBear #PrabhuBhatara

  புவனேஷ்வர்:

  ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒரு குழுவினருடன் வேனில் காட்டு பகுதி வழியாக அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் ஒரு கரடியை அந்த குழுவினர் பார்த்துள்ளனர். அந்த கரடி காயமடைந்திருந்ததாக கூறப்படுகிறது.

  இதையடுத்து அவர்கள் வாகனத்தில் இருந்து இறங்கி கரடியை அருகில் சென்று பார்க்க முயற்சி செய்துள்ளனர். அப்போது டிரைவர் பிரபு பட்டாரா அந்த கரடியுடன் செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளார். உடனிருந்தவர்கள் அவரை எச்சரித்துள்ளனர். செல்பி எடுக்க முயற்சி செய்தபோது கால்தவறி அவர் கரடி அருகே விழுந்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கரடி பிரபுவை தாக்க முயற்சி செய்தது. கரடியிடம் சிக்கிக்கொண்ட அவர், அதனிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார்.  அருகில் இருந்தவர்களும் அந்த கரடியை தாக்கி, அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். இருப்பினும் அந்த கரடி அவரை இறுதிவரை தப்பிக்க விடவில்லை. இறுதியில் பிரபு பட்டாரா கரடி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளர். அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. #Odisha #SelfiewithBear #PrabhuBhatara


  Next Story
  ×