search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏ.ஆர் ரகுமான், ஜேசுதாஸ் உள்பட குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் விருது வழங்கினார் ஜனாதிபதி
    X

    ஏ.ஆர் ரகுமான், ஜேசுதாஸ் உள்பட குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் விருது வழங்கினார் ஜனாதிபதி

    தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், ஏ.ஆர் ரகுமான், ஜேசுதாஸ் உள்பட குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருது வழங்கியுள்ளார். #NationalFilmAwards
    புதுடெல்லி:

    தேசிய திரைப்பட விருதுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டன. அதன்படி விருது வழங்கும் விழா டெல்லியில் இன்று நடந்தது. வழக்கமாக தேசிய விருதுகளை நாட்டின் ஜனாதிபதி தான் வழங்குவார். ஆனால், இந்த முறை அடையாளமாக 11 பேருக்கு மட்டுமே ஜனாதிபதி விருது வழங்குவார் என்றும், மற்றவர்களுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி ஸ்மிருதி இராணி விருதுகளை வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

    இது விருது வென்றவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து விருது பெற உள்ள 68 பேர் திரைப்பட விழாவில் பங்கேற்க போவதில்லை என்று கடிதம் எழுதினர். இதையடுத்து விருது வழங்கும் விழாவை புறக்கணித்த திரைக் கலைஞர்களுக்கான இருக்கைகள் நீக்கப்பட்டது.



    தேசிய விருதுகளை ஸ்மிருதி இராணி மற்றும் இணை மந்திரி விஜய் ரதோர் வழங்கினர். இந்த விழாவில் சிறந்த தமிழ்படத்திற்கான விருதை வென்ற டூலெட் பட இயக்குநர் உள்ளிட்ட 68 பேர் பங்கேற்கவில்லை.

    கடைசி கட்டமாக கலந்து கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பாடகர் கே.யேசுதாஸ் ஆகியோருக்கு விருதுகளை வழங்கினார். சிறந்த நடிகை விருதை மறைந்த ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்.

    மறைந்த நடிகர் வினோத் கண்ணாவிற்கு தாதா சாகேப் பால்கே விருதை ஜனாதிபதி வழங்கினார். #NationalFilmAwards
    Next Story
    ×