search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    எனக்கு எதிராக காங்கிரஸ் வன்முறையை தூண்டி விடுகிறது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
    X

    எனக்கு எதிராக காங்கிரஸ் வன்முறையை தூண்டி விடுகிறது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

    ஏழையான நான் பிரதமரானதை பொறுக்க முடியவில்லை, எனக்கு எதிராக காங்கிரஸ் வன்முறையை தூண்டி விடுகிறது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். #PMModi

    புதுடெல்லி:

    பா.ஜனதா தொடங்கப்பட்ட 38-வது ஆண்டு தினத்தையொட்டி கலந்துரையாடல் நிகழ்ச்சி டெல்லியில் நடந்தது. இதில் பா.ஜனதா தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது மோடி பேசியதாவது:-

    நான் ஏழைத் தாய்க்கு பிறந்து பிரதமர் பதவியை அடைந்துள்ளேன். இதை எதிர்கட்சிகளால் பொறுத்து கொள்ள முடியவில்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்த யாரும் நாட்டின் உயர் பதவியை எட்டினால் காங்கிரசால் பொறுத்துக் கொள்ளவே முடியாது.

    பா.ஜனதா என்பது பிராமணர்கள் மற்றும் வடமாநில வணிக சமூகத்தினரின் கட்சியாகவே நீண்ட காலமாக கருதப்பட்டு வந்தது. ஆனால் இப்போது தலித் சமூகத்தை சேர்ந்தவரை குடியரசுத் தலைவர் பதவியில் அமர்த்தியுள்ளோம்.

    ஏழை, எளிய மக்களின் ஆதரவு பெற்ற கட்சியாக பா.ஜனதா வளர்ந்துள்ளது. இதை எதிர்க் கட்சிகளால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. பா.ஜனதாவின் செல்வாக்கை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.


    பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் என நாட்டின் அனைத்து தரப்பை சேர்ந்தவர்களும் பா.ஜனதா சார்பில் எம்.பி, எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். அனைத்து மக்களின் அங்கீகாரத்தை பெற்றதன் மூலம் தான் பா.ஜனதாவால் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு எம்.பி.க்களை பெற முடிந்தது.

    பா.ஜனதாவின் வளர்ச்சியை சிதைக்கும் நோக்கில் இப்போது எதிர்க்கட்சிகள் வன்முறை ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர். மக்கள் மத்தியில் தவறான தகவல்களை பரப்பும் எதிர்க்கட்சியினரின் சதிக்கு எதிராக நாம் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

    நாட்டு மக்களுக்காக நாம் உழைக்க வேண்டும். எதிர்க் கட்சியினரின் தூண்டுதல்களால் நாம் பொறுமை இழந்துவிடக் கூடாது. நமது கொள்கைகளை சமூக வலைத்தளங்கள் மூலம் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும். கட்சி தொடங்கிய 38 ஆண்டுகளில் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு நாம் வளர்ந்துள்ளோம்.

    காங்கிரசை எதிர்த்து அரசியலில் வளர்வது அவ்வளவு சுலபம் அல்ல. பா.ஜனதாவுக்கு கிடைத்த சிறந்த தலைவர்களும், தன்னலம் கருதாத தொண்டர்களும் தான் நமது சாதனைகளுக்கு காரணம்.

    இவ்வாறு அவர் பேசினார். #PMModi

    Next Story
    ×