என் மலர்

  செய்திகள்

  சத்தீஸ்கரில் 10 நக்சல்கள் சுட்டுக் கொலை - பாதுகாப்பு படை அதிரடி
  X

  சத்தீஸ்கரில் 10 நக்சல்கள் சுட்டுக் கொலை - பாதுகாப்பு படை அதிரடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 10 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #naxal #encounter
  ராய்ப்பூர்:

  சத்தீஸ்கர் மாநிலத்தின் பீஜப்பூர் மாவட்டத்தில் புஜாரி கங்கர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் நக்சல்கள் சிலர் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  இதையடுத்து, தெலுங்கானா போலீசாரும், சத்தீஸ்கர் போலீசாரும் இணைந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

  அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள் போலீசாரை கண்டதும் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், இந்த சண்டையில் போலீஸ்காரர் ஒருவர் காயம் அடைந்தார். தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #naxal #encounter
  #tamilnews
  Next Story
  ×