என் மலர்

  செய்திகள்

  வண்ணத் திருவிழாவான ஹோலி பண்டிகையை டூடுலால் கொண்டாடும் கூகுள்
  X

  வண்ணத் திருவிழாவான ஹோலி பண்டிகையை டூடுலால் கொண்டாடும் கூகுள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வண்ணத் திருவிழாவான ஹோலி பண்டிகையை இணையதள தேடுபொறியான கூகுள் சிறப்பு டூடுலின் மூலம் இன்று கொண்டாடி வருகிறது. #Googledoodle #Holi2018
  புதுடெல்லி:

  வண்ணத் திருவிழாவான ஹோலி பண்டிகையை இணையதள தேடுபொறியான கூகுள் சிறப்பு டூடுலின் மூலம் இன்று கொண்டாடி வருகிறது.

  ஹோலி (அரங்கபஞ்சமி) பண்டிகை இந்து மதத்தின் பிரபலமான இளவேனிற்காலப் பண்டிகையாகும். இந்தப் பண்டிகை இந்தியா, நேபாளம், வங்கதேசம், போன்ற நாடுகளிலும் சூரிநாம், கயானா, தென்ஆப்பிரிக்கா, திரினிதாத், இங்கிலாந்து, மொரீசியஸ் மற்றும் பிஜி போன்ற இந்து மக்கள் பரவலாக வாழும் நாடுகளிலும் விரிவாகக் கொண்டாடப்படுகின்றது.  இந்த பண்டிகையானது இந்தியாவின் மேற்கு வங்காளம், வங்கதேசம் ஆகிய பகுதிகளில் தோல்யாத்திரை (தௌல் ஜாத்ரா) அல்லது வசந்த உற்சவம் (வசந்தகாலத் திருவிழா) என அழைக்கப்படுகின்றது. இது பெரும்பாலும் பிரஜ் சமூகத்தினரால் கடவுள் கிருஷ்ணனுடன் தொடர்புடைய மதுரா, விருந்தாவன், நந்தகோன், பர்சனா ஆகிய நகரங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

  ஹோலிப் பண்டிகை குளிர் காலத்தின் இறுதியில் பங்குனி (பிப்ரவரி/மார்ச்) மாதத்தின் கடைசி முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகின்றது. இது பொதுவாக பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தின் இறுதியில் வரும். ஆண்டுகள் செல்ல செல்ல ஆப்ரிக்கா, வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தெற்காசியாவிற்கு அருகிலிருக்கும் நாடுகள் போன்ற பல பகுதிகளில் இருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஹோலி முக்கியமான பண்டிகையாகிவிட்டது.

  வண்ணத் திருவிழாவான ஹோலி பண்டிகையை இன்று சிறப்பு புகைப்படம் கொண்ட ‘டூடுல்’ மூலம் ‘கூகுள்’ கொண்டாடி மகிழ்கிறது. #Googledoodle #Holi2018 #tamilnews
  Next Story
  ×