search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார்த்தி சிதம்பரத்தை மேலும் 5 நாட்கள் விசாரிக்க சி.பி.ஐ.க்கு கோர்ட் அனுமதி
    X

    கார்த்தி சிதம்பரத்தை மேலும் 5 நாட்கள் விசாரிக்க சி.பி.ஐ.க்கு கோர்ட் அனுமதி

    ஐ.என்.எஸ் மீடியா வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தை மேலும் 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு பாட்டியாலா ஹவுஸ் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #KartiChidambaram
    புதுடெல்லி:

    ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நேற்று சென்னை விமான நிலையத்தில் சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். உடனே, டெல்லி அழைத்துச் செல்லப்பட்ட அவரிடம் பல மணி நேரம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

    பின்னர், மாலை பாட்டியாலா ஹவுஸ் பகுதியில் உள்ள சி.பி.ஐ கோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்தது. இந்நிலையில், இன்று அவர் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அப்போது, கார்த்தியிடம் விசாரணை நடத்த கால அவகாசம் போதவில்லை என கூறிய சி.பி.ஐ தரப்பு, மேலும் 14 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கோரினர். ஆனால், இதற்கு, எதிர்ப்பு தெரிவித்த கார்த்தி சிதம்பரம் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, இது அரசியல் காரணங்களுக்காக புனையப்பட்ட வழக்கு என வாதிட்டார்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கார்த்தி சிதம்பரத்தை மேலும் 5 நாட்கள் காவலில் விசாரிக்க சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்தார். மார்ச் 6-ம் தேதி அவரை மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.

    மேலும், தினமும் மாலையில் ஒரு மணிநேரம் வழக்கறிஞரை சந்திக்கவும் அனுமதி அளித்தார். மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையில் மருந்துகளை உட்கொள்ள தடை எதுவும் இல்லை. ஆனால், வீட்டு உணவுகளை அனுமதிக்கூடாது என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதனை அடுத்து, கார்த்தி சிதம்பரத்தை அதிகாரிகள் வாகனத்தில் அழைத்துச் சென்றனர். #KartiChidambaram #CBI #INXMediaCase #TamilNews
    Next Story
    ×