என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மும்பை - கமலா மில் துயரத்தை விளக்கி அமைக்கப்பட்ட பிரமாண்ட ஹூக்கா
Byமாலை மலர்1 March 2018 10:25 AM GMT (Updated: 1 March 2018 10:25 AM GMT)
ஹோலி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மராட்டிய மாநிலத்தில் கமலா மில் துயரத்தை விளக்கும் விதமாக பிரமாண்ட ஹூக்கா வடிவமைக்கப்பட்டுள்ளது.
மும்பை:
இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. குறிப்பாக மராட்டிய மாநிலத்தில் ஹோலி பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம்.
இந்நிலையில், ஹோலி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மராட்டிய மாநிலத்தில் கமலா மில் துயரத்தை விளக்கும் விதமாக பிரமாண்ட ஹூக்கா (குடுவை புகைப்பான்) அமைக்கப்பட்டுள்ளது.
மராட்டிய மாநிலம் மும்பையில் கிராண்ட் ரோடில் உள்ள பஞ்சசீல் சொசைட்டியில் பிரமாண்ட ஹூக்கா வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக சொசைடி அதிகாரிகள் கூறுகையில், சமீபத்தில் மும்பை கமலா மில்லில் ஏற்பட்ட தீ விபத்துக்கு ஹூக்கா புகையே காரணம் என தெரியவந்தது. ஹூக்காவால் ஏற்படும் தீமைகளை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பொதுமக்களிடம் ஹூக்கா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த பிரமாண்ட ஹூக்காவை வடிவமைத்துள்ளோம் என தெரிவித்துள்ளனர். #tamilnews
Next Story
×