search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு
    X

    கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு

    கர்நாடக சட்டசபை தேர்தல் மே மாதம் நடைபெற இருப்பதால் தேர்தல் தேதி இந்த மாதம் இறுதிக்குள் அறிவிக்கப்படுகிறது.
    பெங்களூர்:

    தற்போதைய கர்நாடக சட்டசபையின் பதவி காலம் வருகிற மே மாதத்துடன் முடிவடைகிறது. 224 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் மே மாதம் நடைபெற இருக்கிறது.

    கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சி வசம் இருக்கும் ஒரே பெரிய மாநிலம் கர்நாடகம் என்பதால் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதில் காங்கிரஸ் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

    கர்நாடகத்தில் ஏற்கனவே பா.ஜனதா ஆட்சி செய்தது. முதல் முறையாக தென் மாநிலத்தில் கால் ஊன்றிய பா.ஜனதா எடியூரப்பாவின் ஊழலால் தோல்வியைத் தழுவியது. தற்போது மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வியூகம் வகுத்து பிரசாரத்தில் குதிக்கிறது.

    இதனால் கர்நாடக சட்டசபை தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மே மாதம் தேர்தல் நடைபெற இருப்பதால் அதற்கு ஒரு மாதம் முன்னதாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட வேண்டும். எனவே இந்த மாதம் இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது.

    டெல்லியில் விரைவில் தலைமை தேர்தல் கமிஷனர்கள் கூடி ஆலோசனை நடத்தி தேர்தல் தேதியை முடிவு செய்வார்கள். தேர்தல் பாதுகாப்பு, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

    கர்நாடக சட்டசபை தேர்தலையட்டி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் போன்றவை தமிழகத்தை பின்பற்றி ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

    தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகள் ஆன்லைனில் சிறப்பாக நடத்தப்பட்டது. இதே போல் வேட்பாளர்கள் பற்றிய விவரங்கள், வாக்குப் பதிவு எந்திரங்கள், தேர்தல் ஊழியர்கள் பணி நியமனம் வாக்குச் சாவடிகள் போன்ற அனைத்தும் கம்ப்யூட்டர்களில் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டது. சி.சி.டி.வி. கேமராக்களும் பயன்படுத்தப்பட்டு தேர்தல் அமைதியான முறையில் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.


     
    இதையடுத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய ராஜேஷ் லக்கானியின் ஆலோசனையை கர்நாடக தேர்தல் அதிகாரிகள் நாடியுள்ளனர். தேர்தல் பணி தொடர்பான அனைத்தும் கம்ப்யூட்டர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டதால் புகாருக்கு இடமின்றி பொதுத் தேர்தலும், இடைத்தேர்தல்களும் நடத்தப்பட்டன.

    இது தொடர்பான தொழில்நுட்ப உதவிகளையும் தமிழகத்திடம் இருந்து கர்நாடக அதிகாரிகள் நாடியுள்ளனர். இதேபோல் தேர்தலில் பண நடமாட்டத்தை தடுக்க தேர்தல் அதிகாரிகள் வருமான வரித்துறை அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டது போல் கர்நாடகத்திலும் பின்பற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. #tamilnews
     
    Next Story
    ×