search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பங்குச்சந்தைகள் கடும் சரிவு: ரூ.5 லட்சம் கோடி இழப்பை சந்தித்த முதலீட்டாளர்கள்
    X

    பங்குச்சந்தைகள் கடும் சரிவு: ரூ.5 லட்சம் கோடி இழப்பை சந்தித்த முதலீட்டாளர்கள்

    இந்திய பங்குச்சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே கடும் சரிவு ஏற்பட்ட நிலையில், முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
    மும்பை:

    பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து இந்திய பங்குச்சந்தைகள் சரிவைச் சந்தித்துவருகின்றன.  பங்குச்சந்தை சார்ந்த ஓராண்டுக்கு மேற்பட்ட முதலீட்டு ஆதாயத்திற்கு 10 சதவீத வரி விதிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. நிதி பற்றாக்குறை அதிகரிக்கும் என்ற தகவலானது பங்குச்சந்தையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த சூழ்நிலையில் சர்வதேச பங்குச்சந்தைகளில் இன்று கடும் சரிவு காணப்பட்டது. இதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் எதிரொலித்தது. அத்துடன், இந்திய பட்ஜெட் தாக்கமும் சேர்ந்துகொண்டது. இதன் காரணமாக இன்று காலை இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் தொடங்கியது முதலே பங்குகள் கடுமையாக சரிவடைந்தன.



    மும்பை பங்குச்சந்தையில் காலை 10 மணி நிலவரப்படி 1053 புள்ளிகள் சரிந்து(3.03 சதவீதம்), 33703 என்ற அளவில் வர்த்தகம் நடைபெற்றது. இதேபோல் தேசிய பங்குச் சந்தையில் நிப்டி 318 புள்ளிகள் சரிந்து 10348 என்ற அளவில் வர்த்தகம் நடைபெற்றது.

    ஒருகட்டத்தில் சென்செக்ஸ் 1300 புள்ளிகளும், நிப்டி 350 புள்ளிகளும் சரிந்தன. இது 2015-க்குப் பிறகு மிகப்பெரிய வீழ்ச்சியாகும். அதன்பின்னர் சற்று உயர்வடைந்தது.

    இன்றைய வர்த்தகத்தில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் பங்குகள் கூட  சரிவடைந்தன. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் ரூ.5 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டது. இதனால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.  #tamilnews
    Next Story
    ×