என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
லாலு பிரசாத்தின் தண்டனை விவரம் இன்று அறிவிப்பு
Byமாலை மலர்6 Jan 2018 6:56 AM IST (Updated: 6 Jan 2018 2:20 PM IST)
இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 16 பேரின் தண்டனை விவரம் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என நீதிபதி கூறியுள்ளார். #FodderScamVerdict #LaluPrasadYadav
ராஞ்சி:
ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் மற்றும் சிலர் மீது ரூ.89.27 லட்சம் கால்நடை தீவன ஊழல் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி சிவபால் சிங், லாலு பிரசாத் உள்பட 16 பேர் குற்றவாளி என கடந்த மாதம் 23-ந்தேதி தீர்ப்பளித்தார்.
அவருக்கான தண்டனை விவரம் கடந்த 3-ந்தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், அன்று வழங்கப்படவில்லை. மறுநாளைக்கு (நேற்று முன்தினம்) ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் லாலு பிரசாத்தின் ஆதரவாளர்கள், நீதிபதிக்கு தொலைபேசி வழியாக மிரட்டல் விடுத்ததன் காரணமாக நேற்று முன்தினமும் தண்டனை விவர அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டிருந்த 11 பேரின் தண்டனைக்கான வாதம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 16 பேரின் தண்டனை விவரம் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என நீதிபதி சிவபால் சிங் கூறினார்.

Next Story
×