search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    தாவுத் கூட்டாளி சோட்டா ஷகீல் மரணம் எதிரொலி- பாகிஸ்தானை விட்டு வெளியேற தாவுத் திட்டம்
    X

    தாவுத் கூட்டாளி சோட்டா ஷகீல் மரணம் எதிரொலி- பாகிஸ்தானை விட்டு வெளியேற தாவுத் திட்டம்

    தாவுத் இப்ராகிமின் கூட்டாளி சோட்டா ஷகீல் மரணமடைந்ததையடுத்து, பாகிஸ்தானைவிட்டு வெளியேற தாவுத் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #DawoodIbrahim #LeavePakistan #ChotaShakeeldeath
    டெல்லி:

    மும்பை நிழல் உலக தாதா ஆக இருந்தவர் தாவுத் இப்ராகிம். மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான இவர் இந்தியாவில் இருந்து வெளியேறி பாகிஸ்தான் கராச்சியில் குடும்பத்துடன் தங்கியுள்ளார்.

    அவரை ஒப்படைக்கும்படி இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அவர் அங்கு இல்லை என பாகிஸ்தான் அபாண்டமாக மறுத்து வருகிறது. இவர் சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    தாவுத் இப்ராஹிம் செயல்படாமல் இருந்த நேரங்களில் அவர் இடத்தில் இருந்துகொண்டு குற்ற செயல்களில் ஈடுபட்டவர் சோட்டா ஷகீல். தாவுத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியான சோட்டா ஷகீல் மரணமடைந்ததாக கடந்த டிசம்பரில் தகவல் வெளியானது. தற்போது இந்த செய்து உறுதியாகி உள்ளது. அதன்படி கடந்த ஜனவரி மாதமே, சோட்டா ஷகீல் கராச்சியில் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. ஷகீலின் குடும்பம் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. மூலம் இடம் மாற்றப்பட்டு இருக்கிறது.

    இந்நிலையில், தாவுத் இப்ராகிம் பாகிஸ்தானைவிட்டு வெளியேற திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் மத்திய அமெரிக்க நாடுகளில் தஞ்சம் அடையலாம் என கூறப்படுகிறது. #tamilnews #DawoodIbrahim #LeavePakistan #ChotaShakeeldeath
    Next Story
    ×