என் மலர்

  செய்திகள்

  இந்திய படைகளில் 60 ஆயிரம் காலி பணியிடங்கள்: நாடாளுமன்றத்தில் ராணுவ மந்திரி தகவல்
  X

  இந்திய படைகளில் 60 ஆயிரம் காலி பணியிடங்கள்: நாடாளுமன்றத்தில் ராணுவ மந்திரி தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவின் முப்படைகளில் சுமார் 60 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

  புதுடெல்லி:

  இந்தியாவின் முப்படைகளில் சுமார் 60 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

  பாராளுமன்ற மக்களவையில் இன்று ராணுவத்துறை சார்ந்த உறுப்பினர்களின் கேள்விக்கு ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்போது, முப்படைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து அவர் கூறியதாவது:

  இந்திய முப்படைகளில் 59,622 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஜூலை 1-ம் தேதி நிலவரப்படி ராணுவத்தில் 12.64 லட்சம் பேர் இருக்க வேண்டும், ஆனால் தற்போது 12.37 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். அதாவது 27,864 பணியிடங்கள் காலியாக இருக்கிறது.  கடற்படையில் 67,228 பேர் பணியாற்றி வருகின்றனர். அதில் 16,255 பணியிடங்கள் காலியாக உள்ளன. விமானப்படையில் 1.55 லட்சம் வீரர்கள் பணியாற்றிவரும் நிலையில், அதில் 15,503 காலியிடங்கள் உள்ளன.
  மருத்துவம் தொடர்பான காலி பணியிடங்களை சேர்த்து பார்த்தால் மொத்தம் 59,622 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் அதிகாரிகள் தரத்தில் 9,259 பணியிடங்களும், அதிகாரி அல்லாத தரத்தில் 50,363 பணியிடங்களும் காலியாக உள்ளன.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×