என் மலர்

  செய்திகள்

  பருப்பு வகைகள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகள் நீக்கம் - மத்திய மந்திரிசபை முடிவு
  X

  பருப்பு வகைகள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகள் நீக்கம் - மத்திய மந்திரிசபை முடிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அனைத்து வகையான பருப்புகளின் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை நீக்குவது என மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
  புதுடெல்லி:

  அனைத்து வகையான பருப்புகளின் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை நீக்குவது என மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை (கேபினட்) கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

  இந்த கூட்டத்துக்குப்பின் கேபினட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்ட மந்திரியும், மந்திரிசபை செய்தி தொடர்பாளருமான ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

  அனைத்து விதமான பருப்பு ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டு இருந்த தடை மற்றும் கட்டுப்பாடுகளை நீக்க மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் பருப்பு ஏற்றுமதிக்கான வழிகள் திறக்கப்படுவதால் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை லாபகரமான விலைக்கு விற்க முடியும். அத்துடன் பருப்பு சாகுபடி பரப்பையும் அதிகரிக்க வழி ஏற்படும்.

  பருப்பு ஏற்றுமதி நடவடிக்கை மூலம் உபரி பருப்பு வகைகளுக்கு ஒரு மாற்று சந்தைக்கான வழி ஏற்படுவதுடன், சந்தையை மீண்டும் கைப்பற்ற நாட்டுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் உதவிகரமாக இருக்கும். இது தொடர்பாக உணவு மற்றும் பொது வினியோகத்துறை செயலாளர் தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் குழு பருப்பு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கொள்கையை மறு ஆய்வு செய்யும்.

  ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி சேவைகள், வளரிளம் பெண்களுக்கான திட்டம், குழந்தை பாதுகாப்பு சேவைகள் மற்றும் தேசிய மழலையர் திட்டம் போன்ற 4 திட்டங்களை தொடர்வதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

  இந்த 4 திட்டங்கள் மற்றும் தேசிய ஊட்டச்சத்து திட்டத்துக்கு அடுத்த ஆண்டு நவம்பர் வரை ரூ.41 ஆயிரம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் குழந்தைகள், கர்ப்பிணிகள், வளரிளம் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் என 11 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்பெறுவார்கள்.

  நகர்ப்புறங்களில் நடுத்தர வருவாய் (எம்.ஐ.ஜி.) கொண்ட பிரிவினருக்கு வீடு வழங்க வகை செய்யும், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீட்டின் உட்பரப்பு வரம்பை அதிகரிக்க கேபினட் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2022-ம் ஆண்டுக்குள் அனைத்து நகர்ப்புற ஏழைகளுக்கும் வீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

  இதில் எம்.ஐ.ஜி. முதல் திட்ட பயனாளிகளின் வீட்டு உட்பரப்பின் அளவு 90 சதுர மீட்டரில் இருந்து, 120 சதுர மீட்டராக அதிகரிக்க முடியும். ரூ.6 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்டவர்களை பயனாளிகளாக கொண்ட இந்த திட்டத்தில் 4 சதவீத மானிய வட்டி விகிதத்தில் ரூ.9 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.

  இதைப்போல எம்.ஐ.ஜி. 2-ம் திட்ட பயனாளிகளின் வீட்டு உட்பரப்பின் உச்சவரம்பு 110 ச.மீ-யில் இருந்து 150 ச.மீ. ஆக உயர்த்தப்படுகிறது. ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்டவர்களை பயனாளிகளாக கொண்ட இந்த திட்டத்தில் 3 சதவீத மானிய வட்டி விகிதத்தில் ரூ.12 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.

  நீதித்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் மத்திய நிதியுதவி திட்டத்தை 12-ம் ஐந்தாண்டு திட்ட காலத்துக்கு அப்பாலும் தொடர மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்காக நீதி வழங்கல் மற்றும் சட்ட சீர்திருத்தத்துக்கான தேசிய இயக்கத்தின் மூலம் ரூ.3,320 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்.

  இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார். 
  Next Story
  ×