search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தூர்: தீ விபத்தில் 400 இருசக்கர வாகனங்கள் நாசம்
    X

    இந்தூர்: தீ விபத்தில் 400 இருசக்கர வாகனங்கள் நாசம்

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் முக்கிய தொழில் நகரமான இந்தூரில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 400 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமடைந்தன.
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் முக்கிய தொழில் நகரமான இந்தூரில் உள்ள அக்ராசென் சவுராஹா பகுதியில் பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி, விற்பனை செய்யும் சில கடைகள் இயங்கி வருகின்றன. இன்று அதிகாலை இங்குள்ள ஒரு கடையில் திடீரென்று தீ பிடித்தது. அந்த கடையில் இருந்த வாகனங்களை பதம்பார்த்த தீ, மளமளவென்று அருகாமையில் உள்ள கடைகளுக்கும் பரவியது.

    தகவல் அறிந்து நான்கு வாகனங்களில் விரைந்துவந்த தீயணைப்பு படையினர் சில மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் மூன்று கடைகளில் இருந்த சுமார் 400 இருசக்கர வாகனங்கள் நாசம் அடைந்ததாகவும், பல வாகனங்கள் தொடர்பான பதிவு சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்கள் சாம்பல் ஆனதாகவும் கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×