search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் மீண்டும் எழுச்சி பெறும்: பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
    X

    காங்கிரஸ் மீண்டும் எழுச்சி பெறும்: பிரணாப் முகர்ஜி நம்பிக்கை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அரசியலில் கட்சிகளுக்கு பின்னடைவு ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். எதிர்காலத்தில் காங்கிரசாலும் எழுச்சியை பெற முடியும் என்று முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார்.
    புதுடெல்லி:

    முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது அரசியல் அனுபவங்கள் குறித்து புத்தகங்கள் வெளியிட்டு வருகிறார்.

    இதன் 3-வது புத்தகம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

    இதைத்தொடர்ந்து பிரணாப் முகர்ஜி ஆங்கில பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

    நமது நாட்டில் தேர்தல் முறை அரசியல் உள்ளது. இந்த முறைப்படி ஒரு கட்சிக்கு பின்னடைவு ஏற்படுவதும், எழுச்சி ஏற்படுவதும் வழக்கமான ஒன்றுதான்.

    இப்போது காங்கிரஸ் கட்சி கணிசமாக சுருங்கி இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் எனக்கு இல்லை. ஆனால், இது நிவர்த்தி செய்ய முடியாத ஒன்று அல்ல.

    காங்கிரஸ் கட்சி மட்டும் அல்ல, பல கட்சிகள் தேர்தலில் தோற்று இருக்கின்றன. அந்த தோல்வியில் பாடங்களை கற்றுக்கொண்டும், மக்கள் ஏன் தங்களை ஆதரிக்கவில்லை என்பதை ஆராய்ந்தும் கட்சிகள் மீண்டும் தங்களை வளர்த்து கொள்கின்றன.

    பொதுவாக 2 வி‌ஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு அரசியல் கட்சி இருக்கிறது என்றால் மக்கள் ஏன் அந்த கட்சியை முதலில் ஆதரிக்கிறார்கள்? பின்னர் ஏன் அந்த கட்சியை ஆதரிக்கவில்லை என்பவற்றை பார்க்க வேண்டும்.

    இது ஒன்றும் ஏ.பி.சி.டி. இலக்கணம் அல்ல. மக்கள் அபிலாசைகளுக்கு கட்சிகள் உரிய மரியாதை கொடுக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தற்போதுள்ள நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி கொள்ளும் தகுதி உள்ளது.

    அவர்களால் சூழ்நிலைக்கு ஏற்ப தேவையானவற்றை செய்து மீண்டும் புத்துணர்ச்சியை ஏற்படுத்த முடியும். இதற்கு முன்பும் இதேபோல் பல நிகழ்வுகள் நடந்துள்ளன. எதிர்காலத்தில் காங்கிரசாலும் எழுச்சியை பெற முடியும்.

    2004 பாராளுமன்ற தேர்தலில் அன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டது. அதற்கு முந்தைய தேர்தலில் வாஜ்பாய் கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தினார்.

    அதே சூழ்நிலை 2004-ல் காங்கிரசுக்கு ஏற்பட்டது. இதனால் காங்கிரஸ் கட்சி தன்னை மாற்றி கொண்டு கூட்டணி ஆட்சி அமைத்தது.

    அன்றைய நிலையில் மக்களும் கூட்டணி ஆட்சிகளுக்கு ஆதரவாகவே இருந்தனர். அதே நேரத்தில் கூட்டணி அமைத்ததால் காங்கிரசுக்கு இருந்த இடங்களை பிராந்திய கட்சிகள் தங்கள் வசமாக்கி கொண்டன என்பதை நான் ஏற்று கொள்கிறேன்.

    1977-க்கு பிறகு இது போன்ற நிலைமை ஏற்பட்டு விட்டது. அப்போது ஜெயபிரகாஷ் நாராயணன் காங்கிரசுக்கு எதிராக ஜனசங்கம், பழைய காங்கிரஸ், லோக்தளம் போன்ற கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து தனி சின்னத்தை பெற்று தேர்தலை சந்தித்தார்.

    அதே போன்று காங்கிரசும் பல கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து தேர்தலை சந்திக்கும் நிலை வந்தது. அதில் இருந்தே காங்கிரஸ் கட்சியின் இடங்களை மற்ற பிராந்திய கட்சிகள் எடுத்து கொள்ளும் நிலை ஏற்பட்டு விட்டது. இதனால் காங்கிரஸ் பா.ஜனதாவை விட அதிக இழப்புகளை சந்தித்துள்ளது.

    நான் இந்த நாட்டில் அளவுக்கு அதிகமான பலனை பெற்றுள்ளேன். என் பதவிகள் மூலம் முடிந்த வரை நாட்டுக்காக சிறப்பாக செயல்பட்டு இருப்பதாக கருதுகிறேன்.

    கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கத்துடன் உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. நான் அப்போது ஜனாதிபதியாக இருந்தேன். எங்கள் அரசு கொண்டு வரும் திட்டத்தை நான் ஜனாதிபதி என்ற முறையில் ஆதரித்தேன்.

    பிரதமர் மற்றும் அரசு கொண்டு வரும் திட்டங்களை நான் எதிர்க்க கூடாது. அதே நேரத்தில் நான் நிதி மந்திரியாக இருந்தவன் என்ற முறையிலும் கருத்தும் சொல்ல முடியாது.

    ஆனால், நான் நிதி மந்திரியாக இருந்த போது 1980லும், 2009-2012லும் பல தடவை ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு பற்றிய திட்டங்கள் முன் வைக்கப்பட்டன. ஆனால், அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அது, அன்றைய சூழ்நிலையில் பொருத்தமாக இல்லை.

    இப்போது ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை எடுத்ததற்கு சரியான தருணம் என்பதால் இந்த நடவடிக்கை எடுத்ததாக சிலர் சொல்கிறார்கள்.

    பண மதிப்பிழப்பு விவகாரமும், ஜி.எஸ்.டி. வரியும் வெவ்வேறானது. புதிதாக எந்த திட்டம் கொண்டு வந்தாலும், அதேபோல் தொழில்நுட்ப மாற்றங்கள் கொண்டு வந்தாலும் அதனால் பல பிரச்சினைகள் ஏற்படத்தான் செய்யும். இப்போது ஒட்டு மொத்த வரி விதிப்பு முறையும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நேரத்தில் மிக கவனமாக செயல்பட வேண்டும். எந்த இடத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. எங்கு பொருத்தமாக இல்லை என்பதை தெளிவாக கண்டுபிடித்து அதற்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும்.

    காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்ட போது நான் எதிர்ப்பு தெரிவித்ததால் என்னை இந்து மத சார்புடையவன் என்று சொல்ல முடியாது.

    தீபாவளிக்கு முதல் நாள் அவரை கைது செய்ததால்தான் நான் எதிர்ப்பு தெரிவித்தேன். அவர் இந்து மதத்தில் மிகப்பெரிய மத தலைவர்.

    தீபாவளி கொண்டாடும் மனநிலையில் மக்கள் இருக்கும் போது அவரை கைது செய்தால் உணர்வு ரீதியாக மக்களிடம் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்பதால் தான் நான் அப்போது எதிர்த்தேன்.

    இது போன்ற வி‌ஷயங்களை மிக கவனமாக செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

    Next Story
    ×