search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    பெட்ரோல், டீசலுக்கு அன்றாடம் விலை நிர்ணயம் செய்யும் முறையில் மாற்றம் இல்லை: மத்திய மந்திரி தகவல்
    X

    பெட்ரோல், டீசலுக்கு அன்றாடம் விலை நிர்ணயம் செய்யும் முறையில் மாற்றம் இல்லை: மத்திய மந்திரி தகவல்

    பெட்ரோல், டீசலுக்கு அன்றாடம் விலை நிர்ணயம் செய்யும் முறையில் மாற்றம் இல்லை என மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதாப் தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல் மீதான விலையை மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றியமைத்து வந்தன. கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி முதல் அன்றாட அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நடைமுறைக்கு பின்பு இதுவரை பெட்ரோலும், டீசலும் லிட்டருக்கு 7 ரூபாய் 30 காசுகள் வரை அதிகரித்து இருக்கிறது. இதையடுத்து, பெட்ரோல், டீசல் மீது அன்றாடம் விலையை நிர்ணயிப்பது சுமையாக உள்ளது, எனவே இதை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை நுகர்வோர் தரப்பில் நாடு முழுவதும் எழுந்துள்ளது.



    இதுபற்றி மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதானிடம் நிருபர்களிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:-

    பெட்ரோல், டீசல் விலை குறையும்போது அதன் பலன் உடனடியாக நுகர்வோரை சென்றடையும் விதமாகவும், விலை உயரும்போது அதன் தாக்கம் குறைவாக இருக்கவேண்டும் என்பதற்காகவும் அன்றாட விலை நிர்ணய முறையை எண்ணெய் நிறுவனங்கள் கொண்டு வந்தன.

    மத்திய அரசை பொறுத்தவரை எண்ணெய் நிறுவனங்களின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவே விரும்புகிறது. எனவே இதில் மத்திய அரசு எந்த விதத்திலும் தலையிடாது. இந்த சீர்திருத்தம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×