search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பெங்களூர் சிறையில் நாளை சசிகலாவுடன் சந்திப்பு
    X

    தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பெங்களூர் சிறையில் நாளை சசிகலாவுடன் சந்திப்பு

    பிளவுபட்ட அ.தி.மு.க.வில் டி.டி.வி. தினகரனை ஆதரிக்கும் மூன்று எம்.எல்.ஏ.க்கள் நாளை அக்கட்சியின் பொதுச் செயலாளரை சந்திக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    பெங்களூர்:

    பிளவுபட்ட அ.தி.மு.க.வில் டி.டி.வி. தினகரனை ஆதரிக்கும் மூன்று எம்.எல்.ஏ.க்கள் நாளை அக்கட்சியின் பொதுச் செயலாளரை சந்திக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பிளவுபட்டது. துணை பொதுச் செயலாளராக சசிகலாவால் நியமிக்கப்பட்ட டி.டி.வி. தினகரன் அ.தி.மு.க. அம்மா அணி என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றார். எடப்பாடி பழனிச்சாமியை முதல் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என போராடிவரும் இவருக்கு 21 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.

    இந்த ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தற்போது பெங்களூரில் முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்கள் கட்சி பொதுச் செயலாளர் சசிகலாவை தினகரனை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களான தங்க தமிழ்செல்வன், மாரியப்பன் கென்னடி, கதிர்காமு ஆகியோர் நாளை சந்திக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    Next Story
    ×