என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
இட்லி-தோசை மாவு, பொட்டுக்கடலை உள்பட 30 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு: அருண்ஜெட்லி அறிவிப்பு
Byமாலை மலர்10 Sept 2017 1:26 AM IST (Updated: 10 Sept 2017 1:26 AM IST)
இட்லி-தோசை மாவு, பொட்டுக்கடலை, மழைக்கோட்டு, ‘ரப்பர் பேண்டு’ உள்பட 30 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்படுவதாக மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தெரிவித்தார்.
ஐதராபாத்:

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 21-வது கூட்டம் ஐதராபாத் நகரில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தலைமையில் நேற்று நடந்தது. இதில் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த நிதி மந்திரிகள் மற்றும் மத்திய, மாநில அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் மாநில நிதி மந்திரிகள் பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை குறைக்கும்படி கோரிக்கை விடுத்தனர். அதை ஜி.எஸ்.டி. கவுன்சில் ஏற்றுக்கொண்டது. இதேபோல் வரி அதிகமாக விதிக்கப்படும் பொருட்களுக்கு வரி குறைப்பு செய்யவேண்டும் எனவும் மாநில நிதிமந்திரிகள் வலியுறுத்தினர். இதுபற்றியும் விரிவாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்துக்கு பின்பு நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறியதாவது:-
பொட்டுக்கடலை, இட்லி-தோசை மாவு, புண்ணாக்கு, மழைக்கோட்டு, ‘ரப்பர் பேண்டு’ உள்பட 30 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்படுகிறது. வாதாம் பருப்பு மீது விதிக்கப்பட்டு வந்த 12 சதவீத வரி தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.
கதர் மற்றும் கிராம தொழிற்சாலைகள் ஆணையத்தின் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் கதர் துணிகளுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
பெட்ரோல், டீசலில் இயங்கும் சிறிய ரக கார்களுக்கு கூடுதல் வரி என்ற பெயரில் வரி எதுவும் விதிக்கப்படமாட்டாது. அதே நேரம் நடுத்தர கார்களுக்கு கூடுதலாக 2 சதவீத வரி விதிக்கப்படும். பெரிய அளவு கார்களுக்கு 5 சதவீதமும், சொகுசு ரக கார்களுக்கு 7 சதவீதமும் கூடுதலாக வரி விதிக்கப்படும்.
13 இருக்கைகள் கொண்ட வாகனங்களுக்கான ஒட்டுமொத்த வரி விதிப்பில் எந்த மாற்றமும் இல்லை.
வரி செலுத்த தகுதியான 70 சதவீதம் பேர் ஜி.எஸ்.டி.யில் கணக்கு தாக்கல் செய்திருப்பதன் மூலம் ரூ.95 ஆயிரம் கோடி வசூலாகி இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேற்கு வங்காள நிதி மந்திரி அமித் மித்ரா கூறும்போது, “களிமண் பொம்மைகளுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. ரூ.20 லட்சம் வரை வருமானம் ஈட்டும் கைவினைக் கலைஞர்கள், கிராமிய கலைஞர்கள் போன்றோர் தங்களை ஜி.எஸ்.டி.யில் பதிவு செய்யவேண்டிய அவசியம் இல்லை. இதே அளவிலான தொகைக்கு உட்பட்டு மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் சில்லரை பணிகளுக்கும் இதேபோன்ற பதிவு தேவை கிடையாது” என்றார்.
காஷ்மீர் நிதி மந்திரி ஹசீப் டிராபு கூறுகையில், “ஜூலை மாதத்துக்கான விற்பனை வரி கணக்கு தாக்கல் செய்யும்படி அறிவிக்கப்பட்டு இருந்தது, தற்போது அக்டோபர் 10-ந்தேதி வரை நீடிக்கப்பட்டுப்பட்டு உள் ளது. வாதாம் பருப்பு மீதான வரி குறைப்பால் காஷ்மீர் மாநிலத்துக்கு பயன் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

Next Story
×