search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    டெல்லி தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு மாணவன் கொலை - பள்ளி பேருந்து நடத்துனர் கைது
    X

    டெல்லி தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு மாணவன் கொலை - பள்ளி பேருந்து நடத்துனர் கைது

    புதுடெல்லியின் குர்கான் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணவன் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான். இந்த வழக்கில் அப்பள்ளியின் பேருந்து நடத்துனரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    புதுடெல்லி:

    புதுடெல்லியின் குர்கான் பகுதியில் ஒரு பிரபல தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் கழிவறையில் அங்கு இரண்டாம் வகுப்பு படித்துவரும் ஏழு வயது மாணவன் கழுத்து அறுபட்ட நிலையில் இன்று காலை இறந்து கிடந்தான். அவன் அருகில் ரத்தக்கறையுடன் ஒரு கத்தியும் கிடந்தது.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்ததும் அம்மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு வந்து பள்ளி நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பள்ளியில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளையும் உடைத்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் அடிப்படையில் அப்பள்ளியில் பணியாற்றிவரும் ஒரு பேருந்து நடத்துனரை போலீசார் கைது செய்தனர். அந்த நபர் தான் அந்த சிறுவனை கொலை செய்துள்ளான் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மேலும் அந்த நபர் சிறுவனை கொலை செய்வதற்கு முன் ஓரின சேர்க்கையில் ஈடுபட வற்புறுத்தியுள்ளான் எனவும் போலீசார் கூறினர். ஏழு வயது சிறுவன் கொடூரமான முறையில் கழுத்தறுக்கப்பட்டு கொலையுண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


    Next Story
    ×