search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    வறுமையின் கொடுமை: இரு குழந்தைகளை கொன்ற தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
    X

    வறுமையின் கொடுமை: இரு குழந்தைகளை கொன்ற தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

    வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தவித்த தொழிலாளி, தனது இரு குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மும்பை:

    மராட்டிய மாநிலம் சங்கம்னர் தேசில் மாவட்டத்தில் உள்ள பொகாரி பலேஷ்வர் கிராமத்தை சேர்ந்தவர் அஷோக் சந்து பதங்கர் (35). இவருக்கு 7 வயதில் மகனும், 11 வயதில் மகளும் உள்ளனர். இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். தனது வாழ்வில் ஏற்பட்ட வறுமையை எண்ணி மனம் கலங்கினார். இதனால் கடந்த சில தினங்களாக பதங்கர் கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    இந்நிலையில், பதங்கர் தனது வீட்டில் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பதங்கர் தற்கொலை செய்தது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், கடந்த சில தினங்களாக பதங்கர் மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று அவரது மனைவி தாய் வீட்டுக்கு சென்றிருந்தார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் பதங்கர் தற்கொலை செய்ய முடிவெடுத்தார். அதற்கு முன்னர் தனது மகள் மற்றும் மகனின் குரல்வளையை நெரித்து கொன்றுள்ளார். அதன்பின்னர், அவர் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வறுமை காரணமாக கூலி தொழிலாளி தனது இரு குழந்தைகளை கொன்று, தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×