search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ரூ.200 லஞ்சம் தர மறுத்ததால் பிரசவித்த பெண் மீது ஆசிட் வீசிய நர்ஸ்
    X

    ரூ.200 லஞ்சம் தர மறுத்ததால் பிரசவித்த பெண் மீது ஆசிட் வீசிய நர்ஸ்

    ரூ.200 லஞ்சம் கொடுக்க மறுத்ததால் பிரசவித்த இளம்பெண் மீது நர்ஸ் ஒருவர் ஆசிட்டை வீசிய சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பதி:

    விஜயவாடா அடுத்த கிருஷ்ணா ஜில்லாவை சேர்ந்தவர் கிரிஜாபிரியா (வயது22). நிறைமாத கர்ப்பிணி. இவருக்கு கடந்த 28-ந் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவரது உறவினர்கள் கிரிஜா பிரியாவை விஜயவாடா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு ஆண் குழந்தையை பிறந்தது. அப்போது, அங்கு பணியில் இருந்த நர்ஸ் செரிபா, தன்னுடன் சேர்த்து நர்ஸ் 2 பேர் உள்ளோம். எங்களுக்கு தலா ரூ. 200 லஞ்சமாக தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

    அதற்கு கிரிஜா பிரியா, தன்னுடைய குழந்தையை பார்க்க வந்தவர்கள் ரூ.100-ஐ மொய்யா கொடுத்த பணம் மட்டுமே தன்னிடம் உள்ளதாகவும் அதை பெற்றுக்கொள்ளும் படி கூறியுள்ளார். இதை கேட்டு ஆத்திரம் அடைந்த நர்ஸ் செரிபா, கழிவறைக்கு பயன்படுத்தும் ஆசிட்டை எடுத்து வந்து கிரிஜா பிரியா மீது ஊற்றி கொல்ல முயன்றார்.

    இதில், கிரிஜா பிரியாவின் கை, கால்கள் பலத்த காயம் அடைந்துள்ளது. இதுகுறித்து, தகவல் அறிந்த ஆஸ்பத்திரி சுகாதார அலுவலர் டாக்டர் ராமா ராவ் விசாரித்து வருகிறார். மேலும், விஜயவாடா டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×