search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லண்டன்: இந்திய வம்சாவளி இளம்பெண் மர்மமான முறையில் கற்பழித்துக் கொலை
    X

    லண்டன்: இந்திய வம்சாவளி இளம்பெண் மர்மமான முறையில் கற்பழித்துக் கொலை

    பிரிட்டன் தலைநகரான லண்டனில் அரபு நாட்டவருடன் ‘டேட்டிங்’ செய்த இந்திய வம்சாவளிப் பெண் மர்மமான முறையில் கற்பழித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    லண்டன்:

    லண்டன் நகரில் தெற்கேயுள்ள கிங்ஸ்டன்-அப்பான்-தேம்ஸ் பகுதியில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளி இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர் செலைன் டூக்ரான். பிரபல சினிமா நிறுவனத்தில் மேக்கப் உதவியாளராக இருந்து வந்துள்ளார். 19 வயது இளம்பெண்ணான இவர் அரபு நாட்டை சேர்ந்த ஒரு இஸ்லாமியரை காதலித்து வந்தார். அவரையே திருமணம் செய்துகொள்ளும் ஆர்வத்துடன் அந்த அரபு நாட்டு நபருடன் இவர் சிலமுறை ‘டேட்டிங்’ சென்றது அந்தப் பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரியவந்தது.

    இந்திய வம்சாவளியை சேர்ந்த அந்தப் பெண்ணின் பெற்றோர் அராபிய வம்சாவளியை சேர்ந்தவரை திருமணம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில், கடந்த 19-ந் தேதி வேறொரு பெண்ணுடன் செலைன் டூக்ரான் வீட்டில் தனியாக இருந்தபோது உள்ளே வந்த இரு மர்ம நபர்கள் அவர்கள் இருவரையும் கைகால்களை கட்டி ஒரு காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். இருவரையும் கற்பழித்த பின்னர், குளியல் அறையில் வைத்து செலைன் டூக்ரானின் கழுத்தை அறுத்து கொன்றனர். பிணத்தை வீட்டில் இருந்த ஃபிரிட்ஜுக்குள் அடைத்துவிட்டு அவர்கள் வெளியேறினர்.

    பின்னர், கழுத்து அறுபட்ட நிலையில் உடனிருந்த பெண் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரியில் இருந்து போலீசாருக்கு தகவல் அளித்தார். விரைந்துவந்த போலீசார், ஃபிரிட்ஜுக்குள் கிடந்த செலைன் டூக்ரானின் பிரேதத்தை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் கற்பழித்து, கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது.


    இதையடுத்து, கொலையாளிகளை தேடிவந்த போலீசார் முஜாஹித் அர்ஷித்(33) மற்றும் அவரது கூட்டாளி வின்செண்ட் டாப்பூ(28) ஆகியோரை கைது செய்து நேற்று விம்பிள்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்கள் மீது கொலை மற்றும் கற்பழிப்பு, கற்பழிப்பு மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இச்சம்பவத்தின் முகாந்திரத்தை பார்க்கும் போது செலைன் டூக்ரானின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது பெற்றோர் தங்களது கவுரவத்தை காப்பாற்றிக்கொள்ள ஆள்வைத்து அவரை தீர்த்து கட்டியிருப்பதாக போலீசார் கருதுகின்றனர்.

    இந்நிலையில், கொலையாளிகள் மீதான இந்த வழக்கு வரும் ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×