என் மலர்

  செய்திகள்

  மும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 8 பேர் பலி
  X

  மும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 8 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மும்பை காட்கோபர் பகுதியில் 4 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி 8 பேர் பலியாகினர்.
  மும்பை, 

  மராட்டிய மாநிலத்தில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. மராட்டிய மாநிலத்தில் மழை காலங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து உயிரிழப்பு நேரிடுவது வழக்கமாகி வருகின்றன. எனவே கட்டிடங்களின் தரத்தை ஆராய்ந்து சரியான நடவடிக்கை எடுத்து உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்கவேண்டுமென சிலர் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். அரசு தரப்பில் ஆய்வு பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. மழைக்கு முன்னதாக மோசமான கட்டிடங்களில் வாழும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்தது. 

  இந்நிலையில், இன்று மும்பை காட்கோபர் பகுதியில் உள்ள ஒரு நான்கு-மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைநது சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி 8 பேர் பலியாகி உள்ளனர். சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
  Next Story
  ×