search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வின்சென்ட் எம்.எல்.ஏ. மனைவி சுபாவை சந்தித்து உம்மன்சாண்டி ஆறுதல் கூறிய காட்சி.
    X
    வின்சென்ட் எம்.எல்.ஏ. மனைவி சுபாவை சந்தித்து உம்மன்சாண்டி ஆறுதல் கூறிய காட்சி.

    கற்பழிப்பு வழக்கில் கைது: வின்சென்ட் எம்.எல்.ஏ. நிரபராதி என்பதை நிரூபிப்போம்- உம்மன்சாண்டி

    அரசியல் உள்நோக்கம் காரணமாக கற்பழிப்பு வழக்கு கைதான வின்சென்ட் எம்.எல்.ஏ. நிரபராதி என்பதை நாங்கள் நிரூபிப்போம். அவருக்கு நாங்கள் துணை நிற்போம் என உம்மண்சாண்டி கூறியுள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோவளம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் வின்சென்ட். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த 51 வயது பெண் ஒருவர் எம்.எல்.ஏ. மீது கற்பழிப்பு புகார் கொடுத்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் தனக்கு ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

    தன்மீது கூறப்பட்ட புகார் பற்றி வின்சென்ட் எம்.எல்.ஏ. கூறும்போது, என் மீது அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக புகார் கூறப்பட்டு உள்ளது. என் மீது குற்றம் இல்லை என்பதை கோர்ட்டில் நிரூபிப்பேன் என்று கூறியிருந்தார். எம்.எல்.ஏ.வின் மனைவி சுபாவும் தனது கணவர் மீது அந்த பெண் அபாண்டமாக புகார் கூறி உள்ளதாக தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையில் எம்.எல்.ஏ. வுக்கு ஆதரவு தெரிவித்து அவரது தொகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கற்பழிப்பு புகார் கூறிய பெண்ணின் வீட்டை முற்றுகையிட்டனர். அவர்கள் அந்த பெண்ணை கண்டித்து கோ‌ஷங்களையும் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டதால் போலீசார் அங்கு சென்று அவர்களை சமரசப்படுத்தினார்கள். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதைதொடர்ந்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் வின்சென்ட் எம்.எல்.ஏ. வீட்டிற்கு கேரள முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான உம்மன்சாண்டி சென்றார். வின்சென்ட் எம்.எல்.ஏ.வின் மனைவி சுபாவுக்கு அவர் ஆறுதல் கூறினார். மேலும் அவர் கூறியதாவது:-

    வின்சென்ட் எம்.எல்.ஏ. மிகவும் அமைதியானவர். அரசியல் உள்நோக்கம் காரணமாக யாருடைய தூண்டுதலின் பேரிலோ அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவரை விட வயது மூத்த பெண் மூலம் இந்த புகார் கூறப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ. என்ற முறையில் அவர் அந்த பெண்ணிடம் பேசியிருப்பார். அவர் கெட்ட எண்ணம் உள்ளவர் கிடையாது. யார் மீதும் யார் வேண்டுமானாலும் புகார் கூறலாம். அதற்காக கைது செய்வதை ஏற்கமுடியாது. வின்சென்ட் எம்.எல்.ஏ. நிரபராதி என்பதை நாங்கள் நிரூபிப்போம். அவருக்கு நாங்கள் துணை நிற்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×