என் மலர்

  செய்திகள்

  ஹைதராபாத்: போதைபொருள் வைத்திருந்த பிரபல தென்னிந்திய நடிகையின் மானேஜர் கைது
  X

  ஹைதராபாத்: போதைபொருள் வைத்திருந்த பிரபல தென்னிந்திய நடிகையின் மானேஜர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபல நடிகை காஜல் அகர்வாலின் மானேஜர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அங்கு போதைபொருள் கிடைத்ததையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

  ஹைதராபாத்:

  ஹைதராபாத்தில் கஞ்சா, போதை பொருள் வைத்திருந்ததாக பிரபல நடிகையின் மேனேஜரை போலீசார் கைது செய்தனர். தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவரது மேனேஜர் ரோஷோ ரோனி. இவர், லாவண்யா திரிபாதி உட்பட பல்வேறு நடிகைகளுக்கு மேனேஜராக இருந்து வந்தார்.

  இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள ரோஷோ ரோனி வீட்டில் நேற்று காலை மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா மற்றும் போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் புட்கர் ரோன்சன் ஜோசப்பை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

  ஏற்கனவே தெலுங்கு திரைப்பட உலகில் போதை மருந்து பயன்பாடு அதிகரித்திருப்பதாகவும், இதுதொடர்பாக திரைப்படத்துறையை சேர்ந்த 12 பேருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், நடிகை காஜல் அகர்வாலின் மேனேஜர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  Next Story
  ×