என் மலர்

  செய்திகள்

  ஜாக்ருதி
  X
  ஜாக்ருதி

  மோட்டார் சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் கொண்ட பெண் விபத்தில் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மும்பையில் மோட்டார் சைக்கிளை ஓட்டுவதில் ஆர்வம் கொண்ட பெண் விபத்தில் சிக்கி பலியானார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  மும்பை:

  மும்பை பாந்திரா கிழக்கு கேர் நகரை சேர்ந்தவர் விராஜ். இவரது மனைவி ஜாக்ருதி (வயது34). இந்த தம்பதிக்கு 9 வயதில் ஹர்சித் என்ற மகன் இருக்கிறான்.

  ஜாக்ருதி மோட்டார்சைக்கிள் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வமுடையவர். விடுமுறை நாட்களில் தனது தோழிகளுடன் நீண்ட தூரம் மோட்டார்சைக்கிள் ஓட்டி செல்வார்.

  வழக்கம் போல் நேற்று முன்தினம் மோட்டார்சைக்கிளில் பால்கர் மாவட்டம் ஜவஹர் நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அவரது தோழிகள் இருவரும் தனித்தனி மோட்டார்சைக்கிளில் அவருடன் சென்றனர்.

  பால்கர் மாவட்டம் தகானு - ஜவஹர் இடையில் வைத்தி கிராம பகுதியில் சென்று கொண்டிருந்த போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது.

  அப்போது சாலையில் பெரிய பள்ளம் இருப்பதை கவனித்த ஜாக்ருதி அதில் இறங்கி விடாமல் இருப்பதற்காக மோட்டார்சைக்கிளை திருப்பினார். இதில் திடீரென அவர் மோட்டார் சைக்கிளுடன் சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த லாரி ஜாக்ருதி மீது மோதியது.

  லாரி சக்கரம் ஏறி, இறங்கியதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். தங்கள் கண்முன்னே ஜாக்ருதி பலியானதை பார்த்து அவரது தோழிகள் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் ஜாக்ருதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×