என் மலர்

  செய்திகள்

  மாட்டுக்கறி ஏற்றி வந்ததாக கூறி லாரிக்கு மர்ம கும்பல் தீ வைப்பு
  X

  மாட்டுக்கறி ஏற்றி வந்ததாக கூறி லாரிக்கு மர்ம கும்பல் தீ வைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூர் பகுதியில் மாட்டுக்கறி ஏற்றி சென்றதாக கூறி லாரிக்கு பசு பாதுகாப்பு கும்பல் ஒன்று தீ வைத்துள்ளது.
  புவனேஸ்வர்:

  ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதனையடுத்து, மாட்டுக்கறி ஏற்றி வந்ததாக கூறி லாரிக்கு மர்ம கும்பல் ஒன்று தீ வைத்துள்ளது.

  மர்ம கும்பலின் தாக்குதலை தொடர்ந்து டிரைவர் மற்றும் கிளினர் இருவரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து ஓடிவிட்டனர்.  லாரியானது பீகாரில் இருந்து மும்பையை நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

  இது குறித்து பெர்ஹம்பூர் சதர் உதவி டிவிஷ்னல் போலிஸ் அதிகாரி கூறுகையில், லாரியில் உள்ள பாக்கெட்டுகளில் இருப்பது மாட்டுக்கறியா இல்லையா என்பது பற்றி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

  சாலைமறியலில் ஈடுபட்ட அந்த கும்பல் தப்பியோடிய டிரைவர் மற்றும் கிளீனரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுத்தினர்.

  இதனையடுத்து மூத்த போலீஸ் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சரிந்து கிடந்த லாரியில் இருந்த பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

  Next Story
  ×