என் மலர்

  செய்திகள்

  பிரணாப் முகர்ஜிக்கு ஃபேர்வல் - நினைவு பரிசு அளித்த பிரதமர் மோடி
  X

  பிரணாப் முகர்ஜிக்கு ஃபேர்வல் - நினைவு பரிசு அளித்த பிரதமர் மோடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் 25-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அவருக்கு வழி அனுப்பும் விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மோடி நினைவுப் பரிசு ஒன்றினை அளித்தார்.
  புதுடெல்லி:

  ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் 25-ம் தேதியுடன் முடிகிறது. பிரணாப்பின் பதவிக்காலம் முடியுள்ள நிலையில், கடந்த 17-ம் தேதி இந்தியாவின் 14- வது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது.

  இதில் பா.ஜ.க வேட்பாளரான ராம்நாத் கோவிந்த் 65 சதவிகித வாக்குகள் பெற்று நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் குடியரசுத் தலைவராக வரும் 25-ம் தேதி பதவியேற்க உள்ளார்.

  இந்நிலையில், பதவிக்காலம் முடிவடைய உள்ள பிரணாப் முகர்ஜிக்கு டெல்லியில் இருக்கும் ராஷ்டிரபதி பவனில் நேற்று 'ஃபேர்வல்' நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதமர் மோடி அளித்த இந்த விருந்தில் புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் கலந்து கொண்டார்.    இந்த விழாவில் பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மோடி நினைவுப் பரிசு ஒன்றினை அளித்தாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவில் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பிரணாப் முகர்ஜியும் வருகையாளர்கள் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.
  Next Story
  ×