search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்னை மரம் முறிந்து விழுந்ததால் தூர்தர்சன் பெண் தொகுப்பாளர் பலி
    X

    தென்னை மரம் முறிந்து விழுந்ததால் தூர்தர்சன் பெண் தொகுப்பாளர் பலி

    தூர்தர்சன் பெண் தொகுப்பாளர் மீது தென்னை மரம் முறிந்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
    மும்பை:

    மும்பையை அடுத்த செம்பூர் பகுதியில் வசித்து வந்தவர் காஞ்சன் நாத் (வயது 58). தூர்தர்சனில் தொகுப்பாளராக இருந்தார்.காஞ்சன்நாத் 20-ந்தேதி காலையில் நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தார். அப்போது காஞ்சன்நாத் வீட்டின் அருகில் இருந்த தென்னை மரம் முறிந்து அவரின் மேல் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். எனினும் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

    இச்சம்பவத்துக்கு பிர்கன்மும்பை மாநகராட்சி அதிகாரிகளே காரணம் என காஞ்சன்நாத்தின் கணவர் ரஜத்நாத் குற்றம்சாட்டினார். இது குறித்து அவர் கூறுகையில், தென்னை மரம் இருந்த பகுதியில் குடியிருப்பவர், அந்த மரம் விழும் நிலையில் இருந்ததால் வெட்டுமாறு மாநகராட்சியில் பிப்ரவரி மாதமே பணமும் கட்டினார். ஆனால் மாநகராட்சி ஊழியர்கள் அதை வெட்டாததால் தற்போது என் மனைவியின் உயிரை அந்த மரம் பறித்து விட்டது என சோகமாக கூறினார். 
    Next Story
    ×