என் மலர்

  செய்திகள்

  ரெயிலில் வழங்கப்படும் உணவின் தரத்தை மேம்படுத்த புதிய கொள்கை: சி.ஏ.ஜி அறிக்கையால் அதிரடி
  X

  ரெயிலில் வழங்கப்படும் உணவின் தரத்தை மேம்படுத்த புதிய கொள்கை: சி.ஏ.ஜி அறிக்கையால் அதிரடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சி.ஏ.ஜி. அறிக்கையை அடுத்து உணவின் தரத்தை மேம்படுத்த புதிய கொள்கையை இந்திய ரெயில்வே துறை கேட்டரிங் கழகம் உருவாக்கியுள்ளது.
  புதுடெல்லி:

  ரெயில் பயணிகளுக்கு இந்தியன் ரெயில்வே வழக்கும் உணவு மனிதர்கள் உண்பதற்கு தகுதியானது கிடையாது என தலைமை தணிக்கைக் குழு (சிஏஜி) தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது. இந்தியன் ரெயில்வேயின் கேட்ரிங் சர்வீஸ் நிர்வாகத்தில் பல ஓட்டைகள் இருப்பதை சிஏஜி அறிக்கை குறிப்பிட்டு காட்டியது.

  கேட்ரிங் சர்வீஸில் இந்தியன் ரெயில்வேயின் மோசமான நிர்வாகத்தை சுட்டிக்காட்டிய சிஏஜி, தரமற்ற உணவு மற்றும் ஏகபோகமயமாதல் ஆகியவை தரத்தில் சமரசத்திற்கு வழிவகை செய்து உள்ளது என கூறியது.

  இந்நிலையில், சி.ஏ.ஜி. அறிக்கையை அடுத்து உணவின் தரத்தை மேம்படுத்த புதிய கொள்கையை இந்திய ரெயில்வே துறையின் கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் உருவாக்கியுள்ளது.

  அதன்படி, மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உணவு தயாரிக்கும் இடத்தில் இருந்து பயணிகளை அடைவதற்குள் உணவில் ஏற்படும் வித்தியாசத்தை சரிசெய்ய, உணவை பேக் செய்யப்படாமல் வழங்கப்படுவதை கட்டாயமாக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Next Story
  ×