என் மலர்

  செய்திகள்

  காஷ்மீர் எல்லைப் பிரச்சனையில் மூன்றாம் நாட்டின் மத்தியஸ்தம் தேவையில்லை: மெஹபூபா முப்தி
  X

  காஷ்மீர் எல்லைப் பிரச்சனையில் மூன்றாம் நாட்டின் மத்தியஸ்தம் தேவையில்லை: மெஹபூபா முப்தி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தானுடனான காஷ்மீர் எல்லைப் பிரச்சனையில் மூன்றாம் நாட்டின் மத்தியஸ்தம் தேவையில்லை என்றும், இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே சுமுகமான தீர்வு காண முடியும் என்றும் முதல்வர் மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.

  ஸ்ரீநகர்:

  பாகிஸ்தானுடனான எல்லை பிரச்சனையை சரிசெய்ய இந்தியா தனது நட்பு நாடுகளின் உதவியை நாட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினரும் ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.

  அவரது இந்த கருத்துக்கு பதிலளித்து இன்று பேசிய காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி கூறியதாவது:-

  எல்லை பிரச்சனை தொடர்பாக இரு நாடுகள் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே தீர்வுகாண முடியும். 

  மற்ற நாடுகள் இந்த பிரச்சனையில் தலையிட கூடாது. எந்த நாடாக இருந்தாலும் அவர்களது சொந்த வேலைகளை மட்டும் தான் பார்க்கவேண்டும்.

  அமெரிக்கா இந்த பிரச்சனையில் தலையிட்டால் சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் தற்போது இருக்கும் நிலைமைதான் இந்தியாவிற்கும் வரும்.

  சீனாவுடன் ஏற்கனவே திபெத் விவகாரத்தில் சில பிரச்சனைகள் இருப்பதனால் சீனா பாகிஸ்தானுடனான எல்லை பிரச்சனையில் தலையிடுவது சரியாக இருக்காது.

  இந்த பிரச்சனை நமது முன்னோர்களான இந்திரா காந்தி, வாஜ்பாய் போன்றவர்கள் கடைபிடித்த வழிமுறைகளையே நாமும் கடைபிடிக்க வேண்டும்.
   
  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
  Next Story
  ×