என் மலர்

  செய்திகள்

  உ.பி: சிறுத்தை தாக்கியதில் 7 வயது சிறுவன் மரணம்
  X

  உ.பி: சிறுத்தை தாக்கியதில் 7 வயது சிறுவன் மரணம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள முகரியா என்ற கிராமத்தில் சிறுத்தை கொடூரமாக தாக்கியதில் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
  லக்னோ:

  உத்தரபிரதேசம் மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தின் முகரியா கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் என்ற சிறுவன் நேற்று இரவு தனது வீட்டிற்கு வெளியில் உறங்கிக் கொண்டிருந்தான். அப்போது காட்டுப் பகுதியில் இருந்து ஊருக்குள் வந்த சிறுத்தை அவனை இழுத்துச் சென்றுவிட்டது. இதற்கிடையில் சிறுவனை காணவில்லை என பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

  பின்னர் தேடிபார்த்த போது சிறுவனின் உடல் சிறுத்தை தாக்கிய நிலையில் காட்டுப் பகுதியில் இருந்து கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர். சிறுவனின் மரணத்தை கண்டித்து பொதுமக்கள் மூன்று மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
   
  மேலும் சிறுவனின் உடலில் இருப்பது சிறுத்தை தாக்கிய காயங்கள் என உறுதி செய்யப்பட்ட பின் சிறுவனின் குடும்பத்தாருக்கு முதல் கட்ட நிவாரண தொகை வழங்கப்பட்டது. பிரேத பரிசோதனை செய்த பிறகு சிறுவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என காட்டிலாகா அதிகாரி ரஸ்டம் பர்வேஸ் தெரிவித்தார்.

  சிறுத்தை தாக்கி சிறுவன் இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


  Next Story
  ×