என் மலர்

  செய்திகள்

  ஜம்மு காஷ்மீரில் ராணுவம், போலீசார் இடையே மோதல்: உதவி சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 7 பேர் படுகாயம்
  X

  ஜம்மு காஷ்மீரில் ராணுவம், போலீசார் இடையே மோதல்: உதவி சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 7 பேர் படுகாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் சப்-இன்ஸ்பெக்டர் உட்பட ஏழு போலீசார் படுகாயமடைந்துள்ளனர்.

  ஸ்ரீநகர்:

  ஜம்மு காஷ்மீரின் கண்டேர்பால் மாவட்டத்தின் கண்ட் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ராணுவ வாகனத்தை வழிமறித்து சோதனை செய்த போலீசார், ராணுவ வீரர்களிடம் தங்கள் அடையாள அட்டைகளை காட்டுமாறு கூறியுள்ளனர். இதன் காரணமாக ராணுவ வீரர்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

  வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. இந்த மோதலில் ராணுத்தினர், போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.  தாக்கப்பட்ட போலீசாரை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மீட்டனர். அதன்பின்னர், அருகாமையில் உள்ள ராணுவ முகாமிலிருந்து கூடுதலான ராணுவ வீரர்கள் கண்ட் காவல்நிலையம் சென்று மீண்டும் தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் போலீஸ் நிலையத்தில் இருந்த மற்ற போலீசாரும் கடுமையாக காயமடைந்துள்ளனர். 

  இத்தாக்குதலில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உட்பட ஏழு போலீசார் கடுமையாக காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ராணுவ வீரர்களிடம் உள்விசாரனை தொடங்கப்பட்டிருப்பதாக ராணுவ வட்டாரங்களிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Next Story
  ×